அவனுக்குப் பின்னும் தன் ஊழானாகிய பேதைமை உணர்வே மேற்படும். முக்குணங்களும் மாறிவருதல் மனித இயற்கையாதலின், உயர்ந்தபொருள் இழிந்தார்வாயிலும் இழிந்தபொருள் உயர்ந்தார் வாயிலும் உறுதிப்பொருள் பகைவர்வாயிலும் கெடுதிப்பொருள் நட்டார்வாயிலும் வெளிப்படுதலும் கூடும். ஆதலின், சொல்வாரை நோக்காது சொல்லப்படும் பொருளின் நன்மை தீமைகளை ஆய்ந்து கொள்க. மணலின் கட்கேணியின்கண் நீர் தோண்டிய அளவிற்றாக ஊறும். அதுபோல மாந்தர்க்கு அறிவு கற்ற அளவிற்றாக ஊறும். இழவூழ் உற்றக்கடை பேதைபடுக்கும் ஆதலின், விதியை விலக்காகவும் விலக்கை விதியாகவும் மயங்கிக்கூறும் நிலை நூல் உரை போதகாசிரியருக்கு ஏற்படுதல்கூடும் என்பதாம்.] 14 | ஆகையால் அளவிடல் அரிதே; அன்றியும் சொல்லின் கூட்டமும் பொருளின் கூட்டமும் அவ்விரண் டனையும் அளவிடப் படாவே |
ஆகையால் இப்பதின்மூன்று ஏதுவினாலும், விதிவிலக்கு அளவு செய்தல் யாவரானும் கூடாது. அன்றியும் சொற்கூட்டமும் பொருட்கூட்டமும் அதுவே. ஒருபொருள் பலசொல்லினையும், ஒருசொல் பலபொருளினையும் முறையே சொற்கூட்டமும் பொருட்கூட்டமும் என்பர் இலக்கணநூலோர். வேத ஆகமபுராணம் முதலிய நூல்களையும், மாயாகாரியமாய் உள்ள சகல பிரபஞ்சங்களையும் முறையே சொற்கூட்டமும் பொருட்கூட்டமும் என்பர் வீட்டு நூலோர். [வி-ரை: பாடைமாறுபாடு முதல் ஊழ்வயத்தால் விதிவிலக்கு அயர்த்தல் ஈறாக ஏதுக்கள் பதின்மூன்றாதல் காண்க. விதியும் விலக்கும் பலவாய் இருத்தலினானும் இவற்றை உள்ளவாறு அளந்து அறிந்து கூறுதல் அவ்வளவு எளிமை உடைய செயல் அன்று. மலை என்ற பொருளில் விண்டு, விலங்கல், வெற்பு, குவடு, கோடு முதலிய பல சொற்கள் அமைந்துள்ளமை சொற் கூட்டத்துக்கு எடுத்துக்காட்டு. மா என்ற சொல் வண்டு, |