பக்கம் எண் :

86இலக்கணக் கொத்து 

இந்நூல் பார்த்தற்கு உரிய கருவிகள் பத்தாவன

7வடமொழி இலக்கணம் சிலவகுத்து அறிந்து
தொல்காப் பியத்தினும் தொல்காப் பியத்தினும்
அருகிக் கிடந்ததைப் பெருக உரைத்தனன்;
வேறுவிதி நவமாய் விளம்பிலன்என்க1 ;
தொல்காப் பியம்திரு வள்ளுவர் ஆதிநூல்
வடமொழி நியாயம் வந்தன சிலவே
தமிழின் நியாயம் தந்தன பலவால்;
தமிழ்விதி வல்லராய் வடமொழி விதிசில
அறிந்தவர்க் கேஇந் நூல்ஆம் என்க2 ;
வடமொழி வழிகல வாதே தமிழைத்
தனியே நீர்தராத் தன்மை என்னெனின்,
இலக்கணம் இலக்கியம் ஏது நிமித்தம்
சாத்திரம் சூத்திரம் தந்திர வுத்தி
பகுதி விகுதி பதமே பதார்த்தம்
ஆதி அந்தம் அகாரம் மகாரம்
உதாரணம் மாத்திரை உவமை உருவகம்
விகற்பம் சந்தி விதிஅலங் காரம்
காலம் இலேசம் காரகம் ஞாபகம்
விசேடணம் விசேயம் விகரம் அதிகாரம்
குணம்குணி ஆதியாம் சொற்கோள் அன்றியும்
பிறிதின் இயைபின்மை நீக்குதல் பிறிதின்
இயைபு நீக்குதல் என்னும் இலக்கணம்
முதலாப் பலவா மொழிபெயர்த் தனவும்
கொண்டனர் பண்டையோர்;உண்டோ? இன்றோ?
அன்றியும் தமிழ்நூற்கு அளவு இலை; அவற்றுள்
ஒன்றே யாயினும் தனித்தமிழ் உண்டோ?
அன்றியும் ஐந்துஎழுத் தால்ஒரு பாடைஎன்று
அறையவே நாணுவர் அறிவுடை யோரே;
ஆகையால் யானும் அதுவே அறிக3 ;
வடமொ ழிதழிழ்மொழி எனும்இரு மொழியினும்
இலக்கணம் ஒன்றே என்றே எண்ணுக4 ;
எளிய விதிகளை யாவரும் அறிவார்