பக்கம் எண் :

   

வேற்றுமையியல்

வினைமுதல், விளி, செயப்படுப்பொருள், கருவி, கொள்வோன், நீக்கம், குறை, இடம், என்ற எட்டும் வேற்றுமையாம் என்று வட நூல்கள் கூறும். தமிழ் நூல்களில் வேற்றுமை ஏழு என்றும், ஆறு என்றும், எட்டு என்றும் கூறப்பட்டுள்ளன.

விளி வேற்றுமையும் ஆறாம் வேற்றுமையும் நீங்கலான ஏனைய ஆறு வேற்றுமைகளும் வினையால் தம் பொருள் முடிவு அமையுமாயின், காரகம் என்ற பெயரைப் பெறும். ஆறாம் வேற்றுமையும் ஒரோவழிஅருகி வினைகொண்டு முடியும் காலத்துக் காரகமாகும். ‘நாராயணன் ஓராயிம் பூக்களைக் கரத்தால் கொய்து அரற்குக் கொடுத்துச் சக்கரச் சிறுமையின் நீங்கிப் பாற்கடல்கண்ணே பள்ளிகொண்டான்’ என்ற தொடரில், விளி குறை என்ற இரண்டும் நீங்கலான வேற்றுமைகள் ஆறும் காரகமாக அமைந்துள்ளன. இவ்வேற்றுமைகள் ஆறனுள் ஒவ்வொன்றும் காரகமாகும்.

உருபு, வேறுஉருபு, சொல்லுருபு என்று வேற்றுமை உருபுகள் மூன்றாகப் பெயரிடப்பட்டுள்ளன. அவை உரிமையாகவும், ஒப்பாகவும், பொருள் மாறுபட்டும் வரும். இவ்வுருபுகளுள் ஏழாம் வேற்றுமை உருபுகள் உருபு-வேறுஉருபு-சொல்லுருபு என்பன ஆகியும், உருபினை ஏலாத பெயரே ஆகியும், உருபு ஏற்ற பெயரே ஆகியும், உருபு மறைந்த பெயரே ஆகியும், தொடர்ந்து இரண்டு உருபுகள்வரின் அவற்றுள் ஒன்று உருபாகவும் மற்றொன்று பெயராகவும் ஆகியும், உருபு ஏற்கும் பெயருக்குப் பின்னர் வரும் முறைமைமாறி முன்னர் வந்தும் பயன்படும். ‘அவன் தலை ஐந்து, அவன் கடைவெல்லம்’ என்றாற்போல வேற்றுமை உருபுகள் அல்லாதனவும் வேற்றுமை உருபுகளைப் போல வடிவால் தோற்றமளித்தலும் உண்டு. வேறுபடுதலால் வேற்றுமை, வேறுபடுத்தலால் வேற்றுமை, வேற்றுமையைக் கொண்டுமுடிதலால்வேற்றுமைஎன்ற பொருள்களை உட்கொண்டு,