பக்கம் எண் :

174இலக்கணக் கொத்து 

நிற்றல் பலவகையாக வரும், அங்ஙனம் வரும் இடங்களில் பொருள்படும் முறைமையை ஓர்ந்து உருபினை மாற்றிப் பொருள் கோடல் வேண்டும்.]

எ-டு:

‘கிழங்க மணற்கு ஈன்றமுைள்’(அகநா. 212)                          - மணற்கண்,

‘காலத்தினால் செய்த நன்றி’ (கு. 102)                          - காலத்தின்கண்.

[வி-ரை: இவற்றில் நான்கன் உருபும் மூன்றன் உருபும் கண் உருபாகப் பொருள் படுமாறு காண்க.] 47

உருபும் பொருளும் மயக்கம்

60உரிமைமுதல் மூன்றும் ஒருங்கே தோன்ற
நிற்கும் உருபுகள் சிலஉள நினைக்கின்.

எ-டு: பழியின் அஞ்சும், பழியை அஞ்சும், பழியால் அஞ்சும்.

‘நினைக்கின்’ என்றதனால் இரண்டு ஒருங்கே தோன்றலுமுள. மலையில் வீழருவி, மலையிலிருந்தான் என முறையே காண்க.

[வி-ரை: உரிமை முதல் மூன்றும் -இ.கொ. 17.

ஒருவன் வாழ்க்கையில் பழி ஏற்படாமல் வாழ்கிறான் என்ற கருத்தை இரண்டாம் உருபு, மூன்றாம் உருபு ஐந்தாம் உருபு என்பன தத்தம் பொருளைக்கொண்டு விளங்குகின்றன.

பழியை அஞ்சும் - அச்சத்திற்குப் பழி செயப்படுபொருள்.

பழியால் அஞ்சும் - அச்சத்திற்கு பழி கருவியாகிய ஏது.

பழியின் அஞ்சும் - அச்சத்திற்குப் பழி ஐந்தன் பொருளாகிய ஏது.

இவ்வாறு ஒரே கருத்தைப் பல வேற்றுமைகளும் தத்தம் வேற்றுமைப் பொருள் அமைய விளக்குதலும் உண்டு என்பது.