பக்கம் எண் :

230இலக்கணக் கொத்து 

கொண்டானது மாடு;

கொண்டாள்கண் இருந்தாள் குலமகள்;

இரப்பான்! இச்சோற்றை ஏல்;

[வி-ரை: தார்தாங்கிச் செல்வது’ -(கு. 767) முதலியன சுப் என்னும் பிரதமை ஏறி நீங்கிய வினைமுற்றுப் பெயராம் என்க.

‘நெறி நின்றார் நீடு வாழ்வார்’ - (கு.6) என உருபு ஏறி நீங்கல் வரும்.

‘ஒறுத்தாரை ஒன்றாக வையாரே’ - (கு.155) ‘இரப்பார்க்கு ஒன்று ஈவார்மேல் நிற்கும் புகழ்’ - (கு. 242) என உருபு பெறல் வரும்’’ - பிரயோக விவேகம் 37 உரை.]

3வினைமுற் றுப்பெயர் ஈற்றயல் திரிதல்

எ-டு:

ஊன் தின்பார் - ‘ஊன் தின்பவர்’                                   -கு. 252

பெண்மை நயவாதான் - ‘பெண்மை நயவாதவன்’                       - கு. 147

செய்வான் - ‘செய்பவன்’                                      - நன்.வினை.1

வேந்துசெறப்பட்டார் - வேந்து செறப்பட்டவர்’                       - கு. 895

இவற்றுள் ஈற்றயல் திரிதல் காண்க.

[வி-ரை: ‘‘நயவாதான் - செறப்பட்டார் - தின்பார் என நேரே நில்லாமல், ‘பெண்மை நயவாதவன்’ - ‘வேந்து செறப்பட்டவர்’ - ‘ஊன் தின்பவர்’ என ஈற்றயற்கே ரூப பேதம் பொருந்தல் வரும்’’ - பிரயோகவிவேகம் சீ7 உரை.]

4வினைமுற் றுப்பெயர் ஈரெச்ச மாதல்

எ-டு:

நடந்த குதிரைகள்.

பிறந்த பிள்ளைகள்.

- இவை அன்பெறா அகரஈற்று அஃறிணைப் பன்மை வினைமுற்றுப் பெயர் பெயரெச்சமானது.