பக்கம் எண் :

26இலக்கணக் கொத்து 

விகுதிகள் பொருந்துதலால் பகுபதம் அமையும், பகுபதம் வேற்றுமை உருபு - உவமஉருபு - இடைநிலை - சாரியை - என்ற நான்கும் சேர்ந்தோ, தனித்தோ பொருந்தி வரும்; வேற்றுமைப் பொருள்களை ஏற்றும் நிற்கும்; ஒவ்வொரு வேற்றுமை வெவ்வேறாகியும் வரும்; இதனை உடையது இது எனவும் நிற்கும்; இதனது உடைமை இது எனவும் நிற்கும்; இடப்பொருளை உணர்த்தும் வினா, சுட்டு, எண் என்பனவற்றை அடுத்து இடைச்சொல்லாகவும் நிற்கும்; தன்மை மாத்திரம் தானாகவும் நிற்கும்; பெயர்ச்சொல் முதலிய நான்கினும் பிறக்கும்; பெயர்தான் அறுவகையாகப் பிரிந்தும் தோன்றும்; பகுபதமாயினும் பல குணப்படலால் பகாப்பதம் எனப் பெயர் பெறுதலும் உண்டு; வினைக்குறிப்பு முற்றாகவும் வினைக்குறிப்புப் பெயராகவும், பெயரெச்சமாகவும், வினையெச்சமாகவும் பகுபதம் வருதலும் உண்டு; பகாப்பதப் பொருள்படப் பகுபதமாக வருதலும் பகாப்பதச் சொற்படப் பகுபதமாக வருதலும் உண்டு; பகுத்தலை ஏற்றும், பகுக்கப் படாமையை ஏற்றும், இவ்விரு பெற்றிகளையும் ஒருங்கே ஏற்றும் பகுபதம் தோன்றும்; பல சொல் ஒருபொருளாகப் பட்டும், பல பொருள் ஒருசொல்லாகப் பட்டும், இன்னும் பல வகையாகவும் பகுபதம் தோன்றும்.

நிலைமொழியும் வருமொழியும் புணரும் சந்தி, வேற்றுமை வழி - அல்வழி - பொதுவழி - அடங்காவழி என நான்கு வகைப்படும்.

வேற்றுமைவழிச் சந்தி, தொகைச்சந்தி விரிச்சந்திகளால் பதினாறாகவும், உருபு சந்தியோடு கூட்ட இருபத்து நான்காகவும் கணக்கிடப்படும்.

அடுக்குத்தொடர் பெயரடுக்கு, முற்றடுக்கு, உருபு அடுக்கு, பெயரெச்ச அடுக்கு, வினையெச்ச அடுக்கு என ஐவகைத்து. இவ்வைவகையொடு இரட்டைக்கிளவியையும் சேர்க்க அடுக்கு அறுவகைத்தாம். அவ்வடுக்கிலுள்ள சொற்கள் ஒன்று பல அடுக்கல், வேறு பல அடுக்கல், விதியாய் அடுக்கல், மறையாய் அடுக்கல், விதிமறை கூடி விரவி அடுக்கல், பல சொல் கூடி ஒரு