பக்கம் எண் :

28இலக்கணக் கொத்து 

சொல்லுக்கு உரிய பொருள் - பொருள், அதிகாரம், முன்னம், உத்தி, வெளிப்படை, குறிப்பு, மெய்ப்பாடு, அன்மொழி, ஒட்டு, ஆகுபெயர், உவமை, இறைச்சி, உபசாரம், அவா, உள்மயக்கு முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு உரைக்கப்படும்.

உயர்திணை இயற்பெயர், அஃறிணை இயற்பெயர், உயர்திணைச் சாதிஒருமை, சாதிப்பன்மை அஃறிணைச்சாதி ஒருமை, சாதிப்பன்மை, ஒரு சொல் நின்றே தனித்தனி உதவுதல் எனப் பிரிவு ஏழு வகைப்படும்.

இலக்கியம், இலக்கணம், உரை என்ற மூன்றனுள் செய்யுள் இயல்பு அடங்கிவிடும்.

இவ்வாறு இலக்கணக்கொத்தினள் நூல்-ஆசிரியர்-மாணாக்கன் பற்றிய பாயிரச்செய்திகளுள், வேற்றுமை உருபு பொருள் - மயக்கம் ஆகியவை பற்றிய வேற்றுமையியற் செய்திகளும், ஐவகைப்பட்ட வினை பற்றிய வினையியற் செய்திகளும், வடமொழியாக்கம் - தொகைநிலை - பகுபதத்திலக்கணம் முதலிய சொல் பற்றிய எஞ்சிய செய்திகளாகிய எச்சவியற் செய்திகளும் தொகுத்துத் தக்க எடுத்துக்காட்டு விளக்கங்களுடன் தரப் பெற்றள்ளன.