பக்கம் எண் :

256இலக்கணக் கொத்து 

‘ழகர உகரம் நீடிடன் உடைத்தே
உகரம் வருதல் ஆவயி னான’                                  - தொ. எ. 261

எனச் சூத்திரம் செய்து,

‘பழூஉப்பல் லன்ன பருவுகிர்ப் பாவடி’                             - குறுந் 180

என உதாரணம் காட்டுவர். அதுவே உபலக்கணமாக நாலடியில்

‘விராஅய்ச் செய்யாமை நன்று’                                     - நா. 246

‘நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல்வ தூஉம்'                      - நா. 124

என்றும், திருவள்ளுவர் குறளில்,

‘துப்பாய தூஉம் மழை’                                             - கு. 12

‘நீங்கில் தெறூஉம் குறுகுங்கால்’                                      கு. 1104

என்றும் குற்றெழுத்து நிற்கும் இடத்தும் சிறுபான்மை அசை நிலையாக அளபெடுத்து வந்தது காண்க. குரீஇ, உடீஇ என வரும் இறுதிநிலை அளபெடையும் அது.

இனித் தமிழ் நூலார்,

‘நூறோ ஒ ஒ ஒ நூ றென்பாள் துடங்கிடைக்கும் மென்
மாறோமால் அன்றளந்த மண்’                                     [முலைக்கும்

‘உப்போஒஒஒ எனஉரைத்து மீள்வாள் ஒளிமுறுவற்(கு)
ஒப்போநீர் வேலி உலகு’

என இசை விளி பண்டமாற்றாயினவற்றை இயற்கையளபெடை என்றும்,

‘கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகிர்’                                        - கு. 1087

‘செறாஅஅய் வாழிய நெஞ்சு’                                     - கு. 1200

எனக் காரியம் உள்வழி வரும் அசைநிலை அளபெடையைச் செயற்கையளபெடை என்றும் கூறுவர்’’ என ஐந்தாம் காரிகை உரையுள் உரைத்தனவற்றையும் நோக்குக.] 4