2 | வேற்றுமை உவம உருபுகள் இடைநிலை சாரியை நான்கும் தனித்தும் பொருந்தும்
|
அருளை.......அருட்கண், [ஐ முதலிய உருபுகள்] அருள் போல [உவம உருபு] அருளாநின்று, அருள்கின்று [இடைநிலை] கோன், காமத்து [ன், அத்து - சாரியை] என வேற்றுமை உருபும், இடைநிலையும், சாரியையும் தனித்துப் பொருந்தின. அருளினை அருளின்கண், வானம் போல, உண்ணா நின்றனன், கோன்கை, காமத்தின் - எனக் கலந்தும் பொருந்தின. [வி-ரை: தனித்தும் என்ற உம்மையால் கலந்தும் எனவும் கொள்க. அருளினை, அருளின்கண் - இன் - சாரியை; ஐ, கண் - உருபு வானம் போல - அம் - சாரியை; போல - உவம உருபு. உண்ணா நின்றனன் - அன் - சாரியை; ஆநின்று - இடைநிலை. கோன்மை - ன் சாரியை; மை - விகுதி. காமத்தின் - அத்து - சாரியை; இன் - சாரியை.] 3 | வேற்றுமைப் பொருள்களை ஏற்று நின்றும். |
[வி-ரை: வேற்றுமைப் பொருள்களை ஏற்று நிற்றலாவது - உருபு ஏற்கும் பெயர், அவ்வுருபும் அவ்வுருபினை முடிக்கும் சொல்லும் கெட, தான் விகுதியொன்று பெற்றுப் பகுபதமாகி, தன் தொடர்ப்பொருள் முழுதையும் குறிப்பினால் அறிவித்தல். பொன்னை உடையான் என்ற தொடரில் ஐ உருபும் உடையான் என்ற முடிக்கும் சொல்லும்கெட, அன் விகுதி ஒன்று பொன் என்ற சொல்லோடு கூடிப் பொன்னன் என்ற பகுபதமாகிப் பொன்னை உடையவன் என்ற தொடர்ப் பொருளைக் குறிப்பது போல்வன இதற்கு எடுத்துக்காட்டு.] |