‘கடுத்தது காட்டும் முகம்’ -கு. 706 ‘ஞகாரை ஒற்றிய்’ -தொ.எ. 297 ‘கரும்பை ஒத்தாள்’ -சீவக. 191 எனப் பலவகைப் பெயரடியானும் பிறந்த வினை வருதல் காண்க- என்று குறிப்பிட்டுள்ளதும் காண்க.] வினை வகைகள் 69 | முதல்நிலை தொழிற்பெயர் முற்று ஈரெச்சம்என்று ஐவகை யுள்ளே அடங்கும் வினையே.
|
என்பது வெளி. [வி-ரை: வினையானது முதல்நிலைத் தொழிற்பெயர், விகுதி பெற்ற தொழிற்பெயர், முற்று, பெயரெச்சம் வினையெச்சம் என்ற ஐவகை யுள்ளே அடங்கும்] முதல்நிலை பகுக்க இயலாத்தொழிற் பெயர்கள் 70 | முதல்நிலை இன்றியும் தொழிற்பெயர் மொழிகுவர்.
|
எ-டு: பூசல், வேட்டை, சண்டை, கூத்து, தொழில், வினை, ஆசை, வேட்கை, அவா, சூது, வாது, தச்சு, கொல்லு, நெட்டி எனவரும். பட்டினியும் அது. [வி-ரை: வேட்டை என்பதன் பகுதி வேடு என்பது நச்சினார்க்கினியர் கருத்துப்போலும். (சீவக.426 உரை.)] 6 பிறவினை வகை 71 | முதல்நிலை திரிந்தும் திரியா தாகியும் இருவகை ஆகிய இவ்வினை யீற்றின் வி-பி இணைந்து வெவ்வேறு அணைந்தும் இயன்றுஎண் வகையாம் பிறவினை என்ப ‘இயன்று எண் வகையாம் செய்விஎன் ஏவல்’
|
-எனப்பாடம் ஓதுதலும் ஒன்று. |