| வினையியல் - நூற்பா எண். 14 | 213 |
[வி-ரை: எடுத்துக்காட்டுக்கள் பெயர்ப்பின் படு வருதலுக்கும், வினையெச்சத்தின்பின் படு வருதலுக்கும் காட்டப்பட்டுள்ளன. முன்னைய எடுத்துக்காட்டுக்களில் படும் என்பது உண்டாம் என்னும் பொருளிலும், பின்னைய எடுத்துக்காட்டுக்களில் படும் என்பது வேண்டுவது தக்கது - என்ற பொருள்களில் வந்தவாறு. ‘‘பண்புப் பொருளில் வரும் ‘ஒளியோடு ஒழுகப்படும்’ (கு. 698) என்பதுபோன்ற செயப்பாட்டு வினையை யக்கு என்பர். அன்றியும் ‘பொத்துப்படும்’ (கு. 468) ‘மன்றுபடும்’ (கு. 254) ‘சோர்வுபடும்’ (கு. 1046) எனப் பெயர் அடுத்து வரும் படுவையக்கு என்றும், இயற்றப்படுதல் வேறுபடுக்கப்படுதல் எனத் தொழிற்பெயரை அடுத்து வரும் படுவை ய - என்றும் கூறுவர்’’ பிரயோகவிவேகம் 45 உரை.] 7 | தன்பொருள் பிறபொருள் இவ்விரண் டற்கும் பொதுவாய்ப் படுசொல் பொருந்தி நின்றும் பயிலும்
|
எ-டு: ‘உதவி செய்யப்பட்டார்’ (கு. 105) இன்மை தழுவப்பட்டார், அல்லல் அடையப்பட்டார் - இவை ஒருகால் தன்பொருட்கும், ஒருகால் உதவியை ஏற்றுக்கொண்டார், இன்மையைத் தழுவினார், அல்லலை அடைந்தார் எனப் பொருள் - பட்டுப் பிற பொருட்கும் பொதுவாய்ப் படுசொல் பொருந்தல் காண்க. [வி-ரை: தன்பொருள் படுசொல்லோடு கூடிய பொருள்; பிற பொருள் போந்த பொருள்.] 8 | படுசொல் வரப்படாப் படுபொருளாயும் பயிலும்
|
மரம் வெட்டினான், சோற்றை உண்டான் - இவற்றுள் படு சொல்லை வருத்தினும், வரப்படாமல் தடைப்பட்டுக் கிடப்பினும் (மரம் வெட்டப்பட்டது, சோறு உண்ணப்பட்டது) படுபொருள் வந்தது காண்க. |