பக்கம் எண் :

248இலக்கணக் கொத்து 

4, 5செய்யுள் விகாரத்தால் சிதைந்ததனால்
மொழி வருவித்தலாவது

‘ஆகாரஇறுதி அகரஇயற்றே’                                   - தொ. எ. 221

‘செய்த செய்கின்ற செய்யும் என் பாட்டில்’                           - ந. 340

‘கருத்துப் பதப்பொருள் காட்டு’                                      - ந. 22

‘பழியஞ்சிப் பாத்தூண்உடைத்தாயின் வாழ்க்கை’                       - கு. 44

‘துணைவலியும் தூக்கிச் செயல்’                                    - கு. 471

என்பவற்றுள் அகரஇறுதி இயற்றே, செய்யும் என் வாய்பாட்டில், எடுத்துக்காட்டு, இல்வாழ்க்கை, சீர்தூக்கிச் செயல் என்றாற்போல்வன.

செய்யுள் விகாரத்தினும் சிதைந்ததனானும் என இரு பொருள் கொண்டு இவ்வுதாரணங்களை முன்னதற்கு ஆக்கி, பின்னதற்குக்

‘கழாக்கால் பள்ளியுள் வைத்தற்றால்                                - கு. 840

என்பதற்குப் பகரஈகாரம் முதலிய குற்றங்களை மிதித்து என்னும் சொற்களை வருவித்தல் போல்வன எனக் கொள்ளலும் ஒன்று. சிதைந்தது - இழிவுபட்டது.

[வி-ரை: ‘‘ஆகாரஇறுதி அகரஇறுதி இயற்றே’ என்னாது ஆகாரஇறுதி அகரஇயற்றே என்பதும், ‘ஆதியது என்ப அநபிகிதகருத்தா அநபிகிதகருத்தா (பி. வி. 14) என்னாது அநபிகிதம் என்பதும், ‘செய்த செய்கின்ற செய்யும்என் வாய்ப்பாட்டில், என்னாது பாட்டில் என்பதும், எடுத்துக்காட்டு என்னாது காட்டு என்பதும், ‘இல்வாழ்க்கை வழி எஞ்சல் என்னாது வாழ்க்கை வழி எஞ்சல் என்பதும் ‘சீர்தூக்கிச்செயல் என்னாது தூக்கிச்செயல் என்பதும் சேடமாம். இவ்வாறு உரைத்ததனால் பிறிதோரிலக்கணமும் கொள்ளுதல் உரைகாரர் மதம் என்க.’’ - பி. வி. 44 உரை.]