| ஒழிபியல் - நூற்பா எண். 28 | 295 |
சொல் விகாரம் 114 | இந்நான்கு இயல்பும் இயம்புவர் மொழிக்கும்.
|
என்பது ஒரு காரணமும் இன்றியே தோன்றல் முதலிய நான்கும் பெறும் சொற்கள் என்றவாறு. எ-டு: சாத்தன் பசித்து உண்டான் - தோன்றல்.[பசித்து] குருவி - குரீஇ - திரிதல். பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் - பெயர், வினை, இடை, உரி - கெடுதல். நுனிக்கொம்பர், கடைக்கண், அடிநா, இடைநா, கடைநா, அரைக்காசு, முன்மாலை, பின்மாலை, வந்தான் உழுது, செய்தான் மாடம், இருந்தான் குன்றம் - இவை நிலைமாறுதல். என நான்கும் முறையே காண்க. (கொம்பர்நுனி - நுனிக்கொம்பர். ஏனையவும் அங்ஙனமே கொள்க) இனிச் சொற்கள் இங்ஙனம் தமிழ்மொழி விதியால் நிலை மாறுதலுமன்றி வடமொழி விதியால் நிலைமாறுதலும் உள. எ-டு: ‘செய்த வேள்வியர் (வேள்வி செய்தவர்) ‘எய்திய செல்வத்தர்’ (செல்வம் எய்தியவர்) - நாலடி. 350 ‘கழிந்த உண்டியர்’ [உண்டி கழிந்தவர்] - முருகு. 132 ‘வேண்டா உயிரார்’ [உயிர் வேண்டார்] - கு. 777 ‘அருங்கேடன்’ [கேடரியன்] - கு. 210 ‘கொண்ட கூழ்த்தாகி’ [கூழ் கொண்டதாகி] - கு. 745 ‘கூப்பிய கையினர்’ [கை கூப்பினர்] - முருகு. 187 வெறுத்த ஆசையர் [ஆசையை வெறுத்தவர்] |