பக்கம் எண் :

 நூலமைப்பு : வேற்றுமையியல்15

வடமொழிமரபினை ஒட்டித் தமிழிற்கும் வேற்றுமை எட்டே என்று முன்னோர் கொண்டனர். ஆகவே, எட்டனையும் இறந்து வரும் வேற்றுமைகளைத் தனித்தனிப் பெயரிட்டு அழையாமல், வேற்றுமை மயக்கம் முதலிய பெயர்களால் அவ்வெட்டனுள் ஏனையவற்றையும் அடக்கிக்கூறும் நிலை ஏற்பட்டுள்ளமையால், வேற்றுமைப் பொருளோடு வேற்றுமைமயக்கமும்கூறல்வேண்டும் இன்றியமையாமை ஏற்பட்டுள்ளது.