+ உண்டான் சாத்தான் ஊருக்குப் போனான். என்புழி, உண்ட சாத்தன் ஊருக்குப் போனான் எனப் பொருள்படுதல் காண்க. இது வினைமுற்றுப் பெயரெச்சமானது. ஏனை மூன்றும் நன்னூல் ‘வினைமுற்றே வினையெச்சமாதலும்’ (ந. 351) என்னும் சூத்திரத்தில் காட்டிய உதாரணங்களால் அறிக. (உதாரணங்களில் மயிலைநாதர் காட்டியவை;) வெறுத்த ஞானி வீட்டை அடைந்தான்; சாத்தன் உழுது வந்தான்; -என்புழி, வெறுத்தான் ஞானி, சாத்தன் உழுதான் எனப்பொருள் ‘பட்டு ஈரெச்சமும் முற்றாதல் காண்க. (வி-ரை: பிரயோகவிவேகம் 37 ஆம் காரிகை உரையில் ‘பொருள் செயல் வகை; வினை செயல் வகை; தோன்ற லாறே; உயிர்த்த லாறே என்பனவற்றுள், செயல், தோன்றல், உயிர்த்தல் என்பன பெயரெச்சமாம்; அவை பொருள் செய்யும் வகை, வினை செய்யும் வகை, தோன்றும் நெறி, உயிர்க்கும் நெறி எனப் பொருள் விரிதலின் என்க. சென்ப பூமி, சென்ம நட்சத்திரம் என்னும் வடமொழியும் அது’’ என்று கூறப்பட்டமை நோக்குக. வினைமுற்று வினையெச்சமாதல், ‘மோயினள் உயிர்த்த காலை’ அகநா-5 (மோந்து உயிர்த்த காலை) முதலியவற்றாலும், குறிப்பு முற்று வினையெச்சமாதல், உச்சிக்கூப்பிய கையினர் தற்புகழ்ந்து’ முருகு. 185 (கையினர்-கையினராய்) முதலியவற்றாலும், குறிப்பு முற்றுப் பெயரெச்சமாதல், ‘பெருவேட்கையேன் எற்பிரிந்து’ (வேட்கையேன்-வேட்கையுடைய) முதலிவற்றாலும் உணரப்படும். ந. 351 உரை.] 18
+ நன்னூல்351 முனிவர் தம் உரையில் எடுத்தாண்டுள்ளார். |