பக்கம் எண் :

 ஒழிபியல் - நூற்பா எண். 12269

இச்சோறு வெண்படி எனக் கலப்பின்மை பற்றியும்,

இவ்வுரு வெண்கலம் என ஒரு பெயரே பற்றியும்,

வெள்ளிடை எனத் தனிமை பற்றியும்,

இவ்வணி வெள்ளைப்பொன் என நிறமின்மை பற்றியும்,

இவனுக்கு வெள்ளைப்புத்தி என மந்தம் பற்றியும்,

இவ்வூரில் வெள்ளைப்பிள்ளையார் எனப் பண்புப் போலி

பற்றியும் (நிறமில்லா இறைவற்கு நிறம் புணர்த்துக் கூறுவது நிறமில்லாததை நிறமுடையது போலக் கூறுவதாகிய பண்புப் போலியாம்) இன்னும் பலவாய் ஒரு பண்பே விரிதலின் ‘பெருகும்’ என்றாம். இக்கருத்து,

‘கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள’                      - தொ. சொ. 372

என்னும் சூத்திரம் முதலியவற்றான் அறிக.

எ-டு:

1. கருங்குதிரை - [பண்பு முன் வருதல்]

2. வெண்ணிறம் - [இருபண்பு அடுத்தல்]

3. சிறுபைந்தூவி - [இருபண்பொடு பொருள் இயைதல்]

4. சிறுவெள்ளை, பெருவெள்ளை - [இவை ஆகுபெயரும் அன்றி,
அன்மொழியும் அன்றி நெல் என்னும் பொருள் தந்தமையின்
இருபண்புகள் தாமே பொருளை விளைத்தமை.]

5. திருவள்ளுவன் தெய்வப் புலவன், அகத்தியன் முனிவன், தண்டியாசிரியன்.
 

[இயற்பெயர் சிறப்புப் பெயர் மாறுதல்.]

6. தெய்வப் புலவன் திருவள்ளுவன், முனிவர் அகத்தியன், ஆசிரியன் தண்டி.
 

[சிறப்புப்பெயர் இயற் பெயர் மாறுதல்.]