பக்கம் எண் :

294இலக்கணக் கொத்து 

[வி-ரை: மேல, அகல், வாளால் என்பன மேன, அகன், வாளான் எனத் திரிந்தன. ஆல் உருபு வேறு, ஆன் உருபு வேறு என்பாரும் உளர். மலையின், பெய்யின் என்பன மலையில் பெய்யில் எனத் திரிந்தன. இல் என்பது ஐந்தன் உருபு என்பாரும் உளர். சுழியொடு என்பது சுழியோடு எனத் திரிந்தது. ஓடு என்பதும் மூன்றன் உருபு என்பாரும் உளர்.

யானை, யாடு என்பன யகர ஒற்றுக் கெட ஆனை, ஆடு என்றாயின. ஆனை, ஆடு என்பனவும் இயற்கைச்சொல் என்பாரும் உளர்.

‘காமவிதி’ என்ற பாடலடி எழுத்து நிரல்நிறை.

‘யானைக்கோடு, பலாக்காய் என்றும், மரப்பாவை, நாடுரி

என்றும், மரவேர் மரநீட்சி என்றும் முறையே ஆகமமும், ஆதேசமும் லோபமும் வரும்.

‘உரிச்சொல்மேன’ ‘அஃறிணைமேன’ ‘கடல் கண்டன்ன கண்ணகன் பரப்பு’, மாகி-மாசி என வன்ன விகாரம் வரும். வைசாசி - வைகாகி - தசை சதை என வன்ன விபரியயம் வரும்.

‘காமவிதி கண்முகம் மென்மருங்குதல் செய்யவாய்
தோமில் துகடினி சொல் அமுதம்’

என்னும் செய்யுளில், காவிமதி துடிகனி என வருவனவும் அது.

யாவர் - யார் என வன்னநாசம் வரும். யாது - யாவது என வன்ன ஆகமம் வரும்.

முன்னில் என்பது முன்றில் எனவும், ‘அட்டில் ஓலை தொட்டனை நில்’ என்பது நின்மே எனவும் வருதலும் அது... ...

இவை தனிமொழியாக, தொடர்மொழியாக, இன்ன எழுத்தின் பின் இன்ன எழுத்து வந்தால் இன்ன வண்ணமாம் என்னும் விதியின்றி வருதலின் வேறே வைத்தாம்’’ பி. வி. 26 உரை.] 27