பொறுத்த சடையினர் [சடையைப் பொறுத்தவர்] கெட்ட வறுமையர் [வறுமை கெட்டவர்] விட்ட அவாவினர் [அவாவை விட்டவர்] ‘வேர்த்து வெகுளார்’ [வெகுண்டு வேரார்] நாலடி. 64 ‘கொழுநற் றொழுது எழுவாள்’ [எழுத்து தொழுவாள்] கு. 55 வாய்பிளந்து உறங்கினான் [உறங்கி வாய்பிளந்தான்] குறட்டைவிட்டு உறங்கினான் [உறங்கிக்குறட்டை விட்டான்] எனவரும். இனித் தமிழ்மொழி விதியால் நிலைமாறுவதற்கும் வடமொழி விதியால் நிலைமாறுவதற்கும் வேறுபாடு என் எனின், நிலை மொழியும் வருமொழியும் திரியாது தம்முள் நிலைமாறுதல், (தமிழ் மொழி விதி) திரிந்து தம்முள் நிலைமாறுதல் (வடமொழி விதி) என்க. எ-டு: ‘வைக்கும் தன்நாளை எடுத்து’ - கு. 776 [தன்நாளை எடுத்து வைக்கும்] 'பருகுவன் - பைதல்நோய் எல்லாம் கெட’ - கு. 1266 [பைதல்.....................பருகுவன்] என்றும், வாய்பிளந்து உறங்கினான் - குறட்டைவிட்டு உறங்கினான் என்றும் முறையே காண்க. இனிச் சொற்கள் யாதானும் ஒரு காரணத்தால் தோன்றல் முதலிய நான்கும் பெறுதலைப் பலரும் விரித்தலின் விரித்திலம் என்க. பெயர் என்பது பேர் என்றும், நீயிர் என்பது நீவிர், நீர் என்றும், எவன் என்பது என்னை, என் என்றும், |