| ஒழிபியல் - நூற்பா எண். 31 | 303 |
| பகுபதத்து இலக்கணம் பகருங் காலை பகாப்பதம் தொடர்மொழி இரண்டினுள் படாமல்
|
குதிரை - பகாப்பதம்; கருங்குதிரைக்கால் - தொடர்மொழி; இவ்விரண்டும் அல்லன எல்லாம் பகுபதமே என்று கொள்ளுதற் பொருட்டு ‘இரண்டினுள் படாமல்’ என்றாம். 1 | ஒருமொழி ஈற்றினும் தொடர்மொழி ஈற்றினும் பின்மொழி கெட்ட முன்மொழி ஈற்றினும் முன்மொழி கெட்ட பின்மொழி ஈற்றினும் அளவிலை யாகி வரும்விகு திகளில் பொருந்தும் விகுதிகள் பொருந்தல் இயையும்
| |
எ-டு: வேலன் - என ஒருமொழி ஈற்றின் விகுதி பொருந்தியது. சேவற்கொடியோன்; ‘தொடியணி தோளன்’ - முருகு. 211 ‘செந்நிறக் குடுமி வெண் சேவற் பதாகையன் - எனத் தொடர்மொழி ஈற்றின் விகுதி பொருந்தியது. தெலுங்கன் சொல்லுதல் தொழிலை உடைய பாடை தெலுங்கன் சொல்லு எனற்பாலது தெலுங்கு எனப் பின்மொழி கெட்ட முன்மொழி ஈற்றின் விகுதி பொருந்தியது. வடுகு என்பதும் அது. பஞ்ச இலக்கணத்தான், எழுத்திலக்கணத்தான், நாற் கவிஞன், ஆசுகவிஞன் எனற்பாலன, இலக்கணத்தான், கவிஞன் என முன்மொழி கெட்ட பின்மொழி ஈற்றின் விகுதி பொருந்தியது. |