| வினையியல் - நூற்பா எண். 19 | 229 |
‘உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு’ ’ - கு. 339 இவ்விரண்டும் பாவமான வினைமுற்றுப் பெயர். ‘வேல் அன்று வென்றி தருவது’ - கு. 546 - இது கரணமான வினைமுற்றுப் பெயர். ‘பற்றியார் வெல்வது அரண்’ - கு. 747 ‘ஆற்ற விளைவது நாடு’ - கு. 732 யாம் இருப்பது உறையூர் - இம்மூன்றும் அதிகரணமான வினைமுற்றுப் பெயர். ‘உலகத்தார் உண்டு என்பது இல் என்பான்’ - கு. 850 என்பது உயர்திணையில் கருத்தாவான வினைமுற்றுப் பெயர். ‘இல்வாழ்வான் என்பான்’ - கு. 41 என்பது உயர்திணையில் கருமமான வினைமுற்றுப் பெயர். இவற்றைத் தொல்காப்பியர் ‘தொழில்நிலை ஒட்டும் ஒன்று’ - சொ.70 என்பர். ஒழிந்தன வந்துழிக் காண்க’’ என்று கூறப்பட்டவற்றுள் ‘வெல்வது அரண்’ என்பதன் இலக்கணத்தில் கருத்துவேற்றுமை உண்மையும், ஏனைய இவ்வாசிரியருக்கும் உடன்பாடாதலும் காண்க.] 2 | எட்டு உருபு ஏற்றே எண்பொரு ளாதல்
|
எ-டு: ‘மாணடி சேர்ந்தார் வாழ்வார்’ -கு. 3 ‘ஒறுத்தாரை ஒன்றாக வையாரே’ - கு. 155 கொண்டானால் வாழ்ந்தாள் குலமகள்; ‘ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்’ - கு. 156 ஈன்றாளின் நீங்கினாள் இவன் நிமித்தம்; |