பக்கம் எண் :

 ஒழிபியல் - நூற்பா எண். 13, 14273

இருவகை உவமை - உவமானச் சொல் முன்மொழியாகவும், பின்மொழியாகவும் வரும் இருவகையாக அமையும் உவமை. மதி போலும் முகம், முகம் மதி போலும் என முறையே விளக்கப்படும் மதிமுகம், முகமதி என்பன இவற்றிற்கு எடுத்துக்காட்டு.] 13

இன்மை பற்றி வரும் உபசர்க்கம்

100அ, அந், ந, நி, கு, வி, வருமொழிப் பொருளை
இன்மை பிறிதுமறை யினுள் ஒன்று ஆக்கும்.

என்றது, இவ்வறுவகையானும் வருமொழிப் பொருளை மூன்றனுள் ஒன்றாக்கும் என்றவாறு.

எ-டு:

அரூபம் - உருவம் இல்லாதது - இன்மை.

அப்பிராமணன் - [பார்ப்பான் அல்லாதான் - பிறிது]

அதன்மம் - [தருமத்திற்கு மாறுபட்டது - மறை]

இவற்றுள் அகரம் உபசர்க்கமாய் வந்து இன்மை. பிறிது, மறை என்ற முப்பொருளும் தந்தது காண்க.

‘அடைந்தாலும் ஒன்றாகாது அநந்நியமாய் இருக்கும் - [அந் - - இன்மை

‘அநந்நியமாய் நிறைந்த - [அந்---பிறிது]

அநங்கன் - [அங்கமில்லாதவன்; அந்---மறை]

அந்நியம் நாத்தியை உணர்த்தும், - [ந+அத்தி-நாத்தி;ந]

‘நிமலனாம் இறைவன்’ - [நி+மலன்-நிமலன்;-நி]

குதர்க்க உரை கூறேல்-கு+தர்க்கம்-குதர்க்கம்;கு]

திக்கினொடு விதிக்கு நீர் செலுத்தி - [வி+திக்கு;-வி]

என முறையே ஆறும் மூன்றும் வந்தன காண்க.

[வி-ரை: ஆறு - ஆறு உபசர்க்கங்கள். இவைபற்றிக் கருத்து வேறுபாடு உண்டு.] 14