பக்கம் எண் :

 ஒழிபியல் - நூற்பா எண். 31311

- இவற்றுள் நின்ற பகாப்பதங்களை எல்லாம் மாண்பினான், பாய்மாஉடையார், களியன், மடியன், குணவான், கவிஞன், இறைவன், கோன், தச்சர், கொல்லர், வேந்தர், அரசர், அமைச்சர், நடுவன், பேதையாள், [பெதும்பையாள் முதல் ஆறும் அது] எனப் பகுபதமாகவே பொருள் கொள்வர். இதனைத் தமிழ் நூலார் ஆகுபெயருள் அடக்கி வழங்குவர்.

[வி-ரை: ‘‘வேந்தனும் வேந்து கெடும்’’ ‘அரசெனப்படுவது நினதே பெரும’ இவற்றுள் வேந்து அரசு என்பன வேந்தனது தன்மை, அரசனது தன்மை என பாவத்தன்மையை உணர்த்தும் உகர ஈற்றுப் பாவதத்திதனாம். புங்ஸ்துவம், ஸ்திரீத்துவம் என வடமொழியினும் வரும். ‘பிறனியலாள் பெண்மை நயவாதவன்’ ‘நாணொடு நல்லாண்மை பண்டுடையேன்’ ‘பொருண்மை சுட்டல்’ என்பனவும் அது’’ -பி. வி. 34 உரை.]

15பகுத்தலை ஏற்றும் பகாமையை ஏற்றும்
இவ்விரு குணத்தையும் ஒருங்கே ஏற்றும்

பகுத்தலை ஏற்றல் முதல் மூன்றும் முன்னர்க் காட்டினவற்றுள் காண்க. அவை,

குழையன் ஊரன் எனவும்,

ஆன, ஈன எனவும்,

அங்ஙனம், இங்ஙனம் எனவும் போல்வன கொள்க.

[வி-ரை: குழை+அன், ஊர்+அன் எனப் பகுத்தல்.

ஆன், ஈன் என்பன அகரம் பெற்ற வழியும் ஆன் + அ, ஈன் + அ - என்று பிரித்துக் கொள்ளப்படா. ஆன் - அவ்விடம்; ஈன் - இவ்விடம். ‘மன்னும் சின்னும் ஆனும் ஈனும்’- தொல். எ. 333

அங்ஙனம், இங்ஙனம் என்பன - அ + ஙனம், இ + ஙனம் என்ற சொற்களின் சேர்க்கையால் ஆகியன. அவை பகுபதம் போலச் சேர்ந்தும் பகாப்பதம் போலவே கொள்ளப்படுகின்றன.]