| பாயிரவியல் - நூற்பா எண். 6 | 79 |
ஆ - பசு; ஆறு - நதி, வழி; ஆற்றினன் - பொறுத்துக் கொண்டான்; ஒன்று-ஒன்று என்னும் எண் - இவை ஒரே சொல்லாய் அமைதலின் தனிமொழி. ஆ-நீ ஆவாய்-முன்னேறுவாய்; ஆறு-நீ ஆறுவாய்-சினம் தணிவாய்; ஆற்றினன்-ஆறு+இன்னன்-வழியில் இத்தன்மையான்; ஆறிரண்டு-ஆறு+இரண்டு-பன்னிரண்டு; ஆறிரண்டு தோளான்-ஆறு+இரண்டு+தோளான்-முருகன்; வாழை-வாழ்+ஐ-வாழும் தலைவன்; என்புழி, ஆ-ஆறு-என்பன எழுவாய் மறைந்த ஏவல்வினை கொண்ட தொடர்மொழி. ஏனைய பல சொற்கள் இணைந்த தொடர்மொழி. எட்டு-எட்டு என்ற எண், எள்+து-எள்ளினை உண்பாய். கவி-பாடல், பாடலை இயற்றுபவன். சாத்தன் (வந்தான்)-உயர்திணை ஆண்பாற்பெயர். சாத்தன் (வந்தது)-அஃறிணை ஆண்பாற்பெயர். வாழ்க (யான் நீ அவன்)-பொதுவினை. இவை ஒரே பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட விதிகள் பெற்றமைக்கு எடுத்துக்காட்டாகும்.] 11 | நூல்உரை போதகாசிரியர் மூவரும் முக்குண வசத்தான் முறைமறந்து அறைவரே |
‘அன்றி இன்றிஎன் வினைஎஞ்சு இகரம் தொடர்பினுள் உகரமாய்(த்திரியும்)’ -ந. 173 என்று முறை கூறினார்; அம்முறையே வினையெச்சம்மே வினை முற்று ஆகலும்’ எனல் வேண்டும்; அது மறந்து, |