பக்கம் எண் :

202இலக்கணக் கொத்து 

உழுவார் உலகத்தார்க்கு ஆணி - உழுவிப்பார் எனவும் அநுபபத்தி தோன்றிய இடத்து இவ்வாறு பொருள் படுவதனை அந்தர்பாவித ணிச் என்பர்.

‘உப்பகாரம் ஒன்றென மொழிப’ தொ.எ.76 என்பதற்குக் காட்டிய தபு என்பதும் அது.’ என்று குறிப்பிட்டுள்ளதும் காண்க.]

நடத்துவிப்பி, நடப்பிப்பி - இருவகை வினையீற்றின் வி - பி இணைந்தன.

நடத்துவித்தான், விடுவித்தான் - இருவகை வினையீற்றின் வி - வேறு வந்தன.

ஊட்டுப்பித்தான், உண்பித்தான் - இருவகை வினையினும் பி - வேறு வந்தன.

வி - பி இணைதற்குப் பொருள், வி - ஆவது பி - ஆவது கூடியாவது இணைந்து நிற்றலே கருத்து என்க.

[வி-ரை: இரு வகைவினை - செய்வி என்வினை, செய் எனவினை.] 7

செய்வி - செய்வினை ஆதல்

72செய்விஎன் வினையுள் செய் வினைசிலவே.

எ-டு:

‘நிரை ஆமாச் சேர்க்கும் நெடுங்குன்ற நாட’

‘நட்பாடல் தேற்றா தவர்’                                           கு - 187

‘தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்’                        - நாலடி 75

- இவற்றுள், சேரும் நெடுங்குன்றம், நட்பாடல் தேறாதவர், தேறா ஒழுக்கம் என்றே பொருள் கொள்வர்.