பக்கம் எண் :

270இலக்கணக் கொத்து 

7. பலாமரம், பரணிமீன், மேடராசி.
 

[சிறப்புப் பொதுப் பெயர் முறையே சிறத்தல்.]

8. அரசன் சோழன், பார்ப்பான் இராமன்.
 

[பொதுச் சிறப்புப் பெயர் முறையே பொருந்தல்.]

9. மக்கட்சுட்டு, பழங்கறி, பழம்புளி, [பின்மொழி ஆகுபெயர் ஆதல்]
10. குழற்பண், யாழ்ப்பண், குழல் இனிது யாழ்இனிது  [முன்மொழி ஆகுபெயராதல்]

11. புளிச்சுமை, கறிச்சுமை. -[இருமொழி ஆகுபெயராதல்]

12. அராஅப்பாம்பு, கன்னியாகுமரி -[ஒரு பொருட்டு இருபெயர்] ஆதல்

13. மன்னன் குமாரன் - [முற்பதம் தமிழ்மொழியாதல்.]

14. அதிநுட்பம் - [முற்பதம் வடமொழியாதல்.]

15. அழகப்பிரான் - [இருபதம் தமிழ்மொழி ஆதல்.]

16. ஆதிபகவன் - [இருபதம் வடமொழி ஆதல்.]

என முறையே காண்க.

‘ஆதி’ என்றதனால், வண்ணம் - வடிவு - அளவு - சுவை முதலாகப் பலரும் எடுத்தோதினவும், அணியினுள் உருவகம் முதலியனவும் கொள்க.

[வி-ரை: இராசி பன்னிரண்டனுள் மேடம் ஒன்று ஆதலின் மேடம் - சிறப்புப்பெயர்; இராசி - பொதுப்பெயர்; மக்கட்சுட்டு - சுட்டு என்பது ஆகுபெயராய்ச் சுட்டப்படும் பொருளையும், கறி என்பது ஆகுபெயராய்க் கறிசெய்யப்பட்ட காயையும், புளி என்பது ஆகுபெயராய்ப் புளியம்பழத்தையும் உணர்த்தின. குழல், யாழ் என்பன முறையே அவற்றினின்றும் எழும் ஒலியை உணர்த்தின.

புளிச்சுமை, கறிச்சுமை - புளியம்பழமாகிய சுமக்கப்படும் பொருள். கறியாக்கப்படுவனவாகிய காயாகிய சுமக்கப்படும் பொருள் என இருமொழி ஆகுபெயர்.