பக்கம் எண் :

 ஒழிபியல் - நூற்பா எண். 31305

[வி-ரை: குழையது உடைய குழையது.
சாத்தனது உடைமை சாத்தனது.

- பிறவும் அன்ன.]

7இடப்பொருள் உணர்த்தும் வினா-சுட்டு எண்-பெற
இடைச்சொல் லாகவே எழுந்து நின்றும்

யாண்டு, யாங்கு, எங்கு, எங்கண், எவண், யாவண், எங்ஙனம், யாங்ஙனம் எனவும்,

ஆன, ஈன, அங்கு, இங்கு, உங்கு, ஆங்கு, ஈங்கு, ஊங்கு, அவண், இவண், உவண், அம்பர், இம்பர், உம்பர், அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், எனவும்,

ஒருவயின், இருவயின் மூவயின், எண்வயின் எனவும் இடப்பொருள் உணர்த்தும் வினா - சுட்டு எண் பெற இடைச் சொல்லாகவே எழுந்து நின்றன.

[வி - ரை: இவை பிரயோக விவேக 33-ஆம் காரிகை உரையில் விளக்கப்பட்டுள்ளன. ஒருவயின், இருவயின், பலவயின் - இவை எண்ணொடு நின்ற ஏழாம் வேற்றுமை. இடப்பொருள் உணர்த்தும் இடைச்சொல் என்னும் அவ்வியயதத்திதன். அவ்வயின் இவ்வயின் உவ்வயின் எவ்வயின், அங்கண் இங்கண். அவ்வாய் ஆயிடை - ‘இவை சுட்டு முதல்வயினும்’ (தொ. எ. 334) என்னும் சூத்திரத்துக் காட்டிய ஏழாம் வேற்றுமை இடப் பொருள் உணர்த்தும் அவ்வியயதத்திதன். நன்னூல் அங்ஙனம் இங்ஙனம் உங்ஙனம் எனக் காட்டியனவும் அன்ன. பி. வி. 33 உரை]

8தன்மை மாத்திரம் தானாய் நின்றும்

வெண்மை வெளுப்பு வெள்ளை, கருமை, கறுப்பு, ஆண்மை, பெண்மை, கோன்மை, ஆடுதல் ஆடல் ஆட்டம் - எனத் தன்மை மாத்திரம் தானாய் நின்றன.