| பாயிரவியல் - நூற்பா எண். 8, 9 | 115 |
எனவே, உடலோடு அழியும் சாதி உயர்ச்சியினும், உயிரோடு செல்லும் கல்வி உயர்ச்சி மேம்பட்டது என்பதனை உட்கொண்டு, பண்டைய ஆசிரியர்கள் கல்வியைப் பொருள் என்று குறிப்பிடுமிடத்து யாதானும் ஓர் அடை கொடுத்தே குறிப்பிடுவர் என்பது விளக்கப்பட்டது. ‘நற்பொருள் செய்வார்க்கு இடம் பொருள் செய்வார்க்கும் அஃதிடம்’ -சீவக.77 முதலாக இலக்கியங்களில் கல்விப்பொருளுக்கு அடை கொடுக்கப்பட்டுள்ளது. ‘வீதல் அறியா விழுப்பொருள் நச்சியார்க்கு ஈதல்மாட்டு ஒத்தி; பெரும! மற்று ஒவ்வாதி’ -கலி.86 தன்னை உடையார் கெடுதல் அன்றித் தான் கெடுதல் இல்லாத செல்வம் - என்பது நச்சினார்க்கினியர் உரை. இவ்வாசிரியரும் கல்வியை வாளா பொருள் என்று குறிப்பிடாது அடைபுணர்த்து அரும்பொருள்’ என்றே குறிப்பிட்டுள்ளார்.] நூல் கற்றற்குரிய கருவிகள் பற்றிய புறனடை 9 | இத்துணைச் சிறப்பில ஆகிய கருவிகள் இன்னும் பலவே, சொல்லத் தொலையா; அன்றியும் பலநூல் அறைந்தன சிலசில; ஆகையால் இங்ஙனம் அடங்குதல் அழகே. |
இன்னும் பலவாவன உரையில் பழகுதலைக்காட்டினும்சூத்திரத்தில் மிகவும் பழகுதலும், தனக்குரிய நாட்டைவிட்டுக் கற்றற்கு மறு நாட்டில் சேறலும் போல்வன. இடம் பொருள் ஏவலால் தன் நாட்டில் இருத்தலேயன்றி மறுநாட்டில் சேறல் என்னெனின், ‘வேண்டிய கல்வி யாண்டு மூன்று இறவாது’ (தொ. பொ. 188) ‘ஓதல் பகையே தூது இவை பிரிவே’ (தொ. பொ. 25) ‘ஓதல் பிரிவுஉடைத்து ஒருமூன்று யாண்டே’ (ந. அ. 89), என முன்னூலாகும் பின்னூலாகும் கூறினார். அக்கருத்து இங்ஙனம் விரிக்கின் பெருகும். |