பக்கம் எண் :

 வேற்றுமையில் - நூற்பா எண். 19151

மாடம் செய்யப்பட்டது - மாடம் என்பது எழுவாயாய் அமைந்தும் நோக்குவார்க்குச் செயப்படுபொருளே என்பது தெரிய நிற்றலின் தெரிநிலைச் செயப்படு பொருளாயிற்று. இங்ஙனமே பிரயோகவிவேக நூலாரும் மாடம் தச்சனால் இயற்றப்பட்டது என்பது அபிகித கருமம் என்று குறிப்பிட்டுள்ளார்.

வீரசோழியத்துள்,

‘‘வீட்டை எடுத்தான் தச்சன்

என்புழி, கருமமாய் நின்ற வீடு மற்றொரு சொல்லான் அன்றித் தானே கருமம் என்னும் இடம் தெரிந்து நிற்றலான் தான்தெரி கருமமாயிற்று. (41)

வீடு தச்சன் கட்டினான்.

என்புழி, கருமமாய் நின்ற வீடு கருமம் என்னும் இடம் தானே தெரியாமையாலும், தச்சன் என்னும் காரக பதத்தாலும், கட்டினான் என்னும் கிரியா பதத்தாலும் கருமம் என்று அறியப்படுதலானும் தான்தெரியாக் கருமம் ஆயிற்று. ‘வாய்ச்சி கொல்லன் செய்தான்’. ‘தாலி தட்டான் செய்தான்’ என்பனவும் அது’’ - என்று தெரிநிலை தெரியாநிலைகள் வேறு வகையாக விளக்கப்பட்டுள்ளன. (41)

இயற்றப்படுதல் - முன் இல்லதனை உண்டாக்குதல்.

வேறுபடுத்தல் - முன் உள்ளதனை வேறாக்குதல்.

எய்தப்படுதல் - இயற்றுதலும், வேறுபடுத்தலுமன்றிச் செயப்படுபொருள் வினைமுதலின் தொழிற்பயன் உறும் துணையாய் நிற்றல்.

ஆரியன் மாணாக்கனை ஊர்க்குப் போக்கினான், தாய் மகளை ஊர்க்குப் போக்கினாள் - இத்தொடர்களில், மாணாக்கன் - மகள் - போதற்றொழிலுக்கு வினைமுதல்; போக்குதல் தொழிலுக்குச் செயப்படுபொருள்.

ஆரியனும் தாயும் போகும்வினைக்கு ஏவுதல் கருத்தா; போக்கும்வினைக்கு இயற்றுதல் கருத்தா.