பக்கம் எண் :

154இலக்கணக் கொத்து 

கௌவையால் காமத்தை அவித்தல்.

- இத்தொடர்களில் எரியை வளர்க்கும் நெய்யையும் காமத்தை வளர்க்கும் அலரையும் அவற்றை அவித்தற்குக் கருவியாகக் கோடல் வேற்றுமைக் காரணமாம்.

இறைவனால் உலகம் உள்ளது - உலகத்தின் உண்மைக்கு இறைவனாகிய வினைமுதல் காரணமாதல் காண்க.

இப்பருவம் காரத்தின் வெய்ய எந்தோள் - முன்புச் சந்தனச் சாந்துபோலக் குளிர்ச்சி தந்த என் தோள்கள் இப்பொழுது காரமருந்தைப்போல எரிச்சலைத் தருகின்றன என்பதனால் தோள் வெய்யவாதலுக்குக் காரணம் இப்பருவம் எனல் காலக் காரணம்.

‘வனைந்தான் என்புழிக் குடமாகிய மண் முதற்காரணம்.

தண்டசக்கரம் முதலிய கருவிகள் துணைக்காரணம்.

அறிவாலாகிய காட்சி - அறிவு - ஞாபகஏது.

மண்ணாலாகியகுடம் - மண் - காரகஏது.

நடந்தான் என்பது நடத்தலைச்செய்தான் என்பதாகலின், பலவேறு வினைகளிலும் பொதுமையின் நிற்கும் புடைபெயர்ச்சியாகிய தொழில் நடத்தற்கு முதற்காரணம் ஆதலின் அதனை வினைக்காரணம் என்க.

நடந்தான் சாத்தன் என்புழி, நடத்தல் தொழிலுக்குச் சாத்தன் நிமித்தகாரணம்’, - இவை நன்னூல் விருத்தியில் காணப்படும் செய்திகள். ந-297.] 22

கருவிக்குப் புறனடை

35கருவியை இன்னும் கழறின் பெருகும்.                        23