பக்கம் எண் :

 ஒழிபியல் - நூற்பா எண். 31317

இவை பெயரினும் சேறல் ‘கிளை எண் குழூஉ’ ந. 276 முதலிய நூற்பாக்களில் காண்க.

பகுதி இடைநிலைகள் முற்று ஒன்றற்கே சிறப்பித்துக் கூறியது:

‘நடவா மடிசீ’                                                    - ந. 137

‘செய் என் வினைவழி’                                             - ந. 138

‘தறட ஒற்று இன்னே’                                              - ந. 142

‘ஆநின்று கின்று கிறு'                                             - ந. 143

‘ப-வ-மூவிடத்து’                                                  - ந. 144

‘றவ்வொடு உகர உம்மை’                                          - ந. 145

என்பன.

பெயரியலுள் வேண்டும் விகுதிகளையும் வினையியலுள் வேண்டும் விகுதிகளையும் வேறாக எடுத்து ஓதியது:

‘கள் என் ஈற்றின் ஏற்பவும்’                                       - ந. 278

‘கள்இறு மொழியும்’                                              - ந. 280

முதலியனவும்

‘செய்த செய்கின்ற செய்யும்’                                       - ந 340

‘செய்யுளுள் உம் உந்து ஆகலும்’                                   - ந. 341

முதலியனவும் ஆம்.

நால்வகை விகுதிகள் - உயிர், மெய், உயிர்மெய், சொல் என நால்வகைப்படும் விகுதிகள்]

இனி,

பொருந்தும் விகுதிகள் பொருந்தல்

என்றது என் எனின்,

குழையன் - இகரம் பெறாது;

செட்டி - அன் பெறாது;