| ஒழிபியல் - நூற்பா எண். 31 | 319 |
‘ஒற்றுஉயிர் முதல்ஈற்று உருபுகள் புணர்ச்சியின் ஒக்கும்மன்; அப்பெயர் வேற்றுமை புணர்ப்பே ’ (242) என்பதனை உட்கொண்டு. இடைச்சொற்கள் பெயரையும் வினையையும் அடுத்து அன்றித் தனித்து நடவா என்பது. ‘தனித்து இயல்இன்றி’ (420) என்னும் இடைச்சொல் இலக்கணத்தால் பெறப்படும். தொல்காப்பியனார் அல்வழியின் பாகுபாட்டை விளக்கினார் அல்லர். நன்னூலார் பெயரையும் வினையையும் அடுத்து வரும் இடைச்சொற்கள் இடைச்சொல் தொடராகும் என்றார். வடநூலார் அவ்வியயீபாவ சமாசன் என இடைச்சொல் தொகையாகும் என்றனர்.] ‘ஐந்தும்’ என்னாது ‘நான்கும் தனித்தும் பொருந்தியும்’ என்றது என்எனின், விகுதி பொருந்திப் பகுபதமாதலே பெரும்பான்மை நோக்கி என்க. ‘வேற்றுமைப் பொருள்களை ஏற்று நின்றும்’ என்னாது ‘ஒவ்வொரு வேற்றுமை வேவ்வேறாகியும்’ என்றது என்எனின் ஒவ்வோருருபின்கண் பல பொருள் வருதல் நோக்கி என்க. பகாப்பதம் என்னும் பெயரைப் பிரித்தது என்எனின், [பகாப்பதம் தொடர்மொழி இரண்டினுட்படாமல்] பகுபதம் என்னும் பெயர் பெரும்பான்மை; பகாப்பதம் என்னும் பெயர் சிறுபான்மை; ஏனை நான்கும் பொது என்று கொள்ளுதற் பொருட்டு என்க. [வி-ரை: ஏனை நான்கும் என்றது ஒரு மொழி, தொடர் மொழி, பின்மொழி கெட்ட முன்மொழி, முன்மொழி கெட்ட பின் மொழி என்பன.] 31 |