6 | பலசொல் கூடி ஒரு பொருளாய் அடுக்கல் |
படை படை, வயிறு மொடுமொடென்றது - இவை பல சொல்கூடி ஒரு பொருளாயடுக்கல். (மொடுமொடென்றது என்பது இரட்டைக் கிளவியுள் அடங்கும்.) 7 | பல பொருட்கு ஒரு சொல்லாய் அடுக்கல் |
ஒவ்வொருவருக்கே இவ்விரு பணம் கொடு. இப் பலசரக்கை வெவ்வேறாக்கு. ‘மாற்றரு நீர் உறைவன நற்பறவைகள் நாற்காலி மன்னியிடும் பஃபத்து’ -இவை பலபொருட்கு ஒரு சொல்லாய் அடுக்கல். [வி-ரை: ஒவ்வொருவர் - தனித்தனி ஒருவர் ஒருவர். இவ்விரண்டு - தனித்தனி இரண்டு இரண்டு. பஃபத்து - தனித்தனி பத்துப் பத்து. வெவ்வேறாக்கு - தனித்தனி வேறாகுமாறு பிரி. ஒவ்வொருவர் முதலிய சொற்கள் பல பொருள்களை விளக்கியவாறு.] 8 | இருவகை தனக்கும் பொதுவாய் அடுக்கல் |
வேறுவேறு என்பன ஒருகால் அவனும் வேறு, இவனும் வேறு எனப் பல பொருளாயும், ஒருகால் அவன் வேறுவேறு என விரைவு ஒரு பொருளாயும் நிற்கும், (இது இருவகை தனக்கும் பொதுவாய் அடுக்கல்.) ஏனைய எல்லாம் வெளி. |