பக்கம் எண் :

328இலக்கணக் கொத்து 

‘மாழைமென் நோக்கி, இடையாய்க் கழிந்தது வந்துவந்தே’          - கோவை. 61

‘அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும்’                          - நாலடி. 213

என்பன ஒன்றுபல அடுக்கல்.

‘கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்’           - கு. 1101

என்புழி வேறுபல அடுக்கல். இன்னும் அச் சேடத்தால்’

‘சென்றது சென்றது வாழ்நாள்’                                    - நாலடி. 4

வந்தது வந்தது கூற்று’                                           - நாலடி. 4

என முற்றுச் சொல்லும்,

‘அவரவர் எச்சத்தால் காணப்படும்’                                  - கு. 114

‘எப்பொருள் யாய்யார்வாய்க் கேட்பினும்'                             - கு. 423

‘அர் ஆர் பவ்வூர் அகரம்’                                       - ந. 327

படை படை - தீத்தீ - எனப் பெயர்களும் அடுக்கி, மக்கள் இரட்டை - விலங்கு இரட்டை போல வரும்.

இன்னும் அதனானே,

‘துடிதுடித்துத் துள்ளி வரும்’

‘கலகல கூஉந்துணை யல்லது’                                   - நாலடி. 140

‘வற்றிய ஓலை கலகலக்கும்’                                    - நாலடி. 256

‘சலசல மும்மதம் சொரிய’                                       - சீவக. 82

‘பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம்’                           - நாலடி. 251

‘புன்னம் புலரி’

‘குறுகுறு நடந்து சிறுகை நீட்டி’                                  - புறநா. 168

‘வயிறு மொடுமொடுத்தது’

‘சிற்றஞ் சிறுகாலே’                                         - திவ். பிர. 502

‘செக்கச் சிவந்த’

‘கன்னங் கரிய’