பக்கம் எண் :

 ஒழிபியல் - நூற்பா எண். 36331

‘மாணடி சேர்ந்தார், (கு. 3) என்னும் வினையைப் பெயராகவே துணிதலும், ‘வேலொடு நின்றான்’ (கு. 552) என்னும் உருபு இடைச்சொல்லைக் கொண்டு என்னும் வினையாகவே துணிதலும் உழுது+ வாரான் என்புழி வாரான் என்னும் வினையின்மையை வினையுண்மையாகவே துணிதலும், ‘அறவினை யாதெனின் கொல்லாமை’ (கு. 321) என்புழிக் கொல்லாமை என்னும் மறையைச் செய்தல் என விதியாகவே துணிதலும் போல்வன இது பொருளன்று என்று அறிந்தும் இதுவே பொருள் எனலாம்.

எல்லாப் பொருள்களும் அவற்றை அறிவிக்கும் எல்லாச் சொற்களும் இம்மூன்றனுள் அடங்கும் என்க. இவற்றுள் முன்னதும் பின்னதும் வழுவன்று; நடுவே வழுவே என்பது,

‘பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு ’                                     - கு. 351

‘நில்லா தவற்றை நிலையின என்றுணரும்                             - கு. 33

புல்லறி வாண்மை கடை’

என்பனவற்றால் அறிக. கூடாஒழுக்கம் என்னும் அதிகாரம் முழுதும் அது.

[வி-ரை: சொல்லோடு பொருளுக்கு உள்ள ஒற்றுமை பற்றிச் சொற்களையும் பொருள் என்றார்.

சேர்ந்தார் என்ற முற்றுவினை படுத்தல் ஓசையால் பெயராயிற்று- வேலொடு நின்றான் - கொண்டு என்ற வினைச்சொல் மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபாய் ஓடு என்ற உருபின் பொருளை விளக்குகிறது. வாரான் என்பது வருதலைச் செய்யான் என்னும் பொருளதாய், ஆண்டுச் செய்யாமையாகிய வினை நிகழ்ச்சியைச் சுட்டுகிறது, மறைவினை விதிவினையோடொக்கும் என்பது இலக்கண நூலார் கருத்து. ‘எதிர்மறையும் விதிவினையோடு ஒக்கும் என ஆணை கூறிற்று’ - தொ. சொ. 108 நச். எனவே, கொல்லாமை எனப்படும், கொலைத்தொழிலைச் செய்யாதிருத்தலும், ஒரு தொழிலாகக் கொள்ளப்பட்டது.


+ (பா-ம்) முழுதும்.