பக்கம் எண் :

348இலக்கணக் கொத்து 

‘அஃதாவது, ஒருசொல் ஒருமையீறு தோன்ற நின்றும் தோன்றாது நின்றும் பின் ஒருமைப் பன்மை வினையீறாக மேல் வந்து முடிக்கும் சொற்களும் இன்றித் தானே பன்மைப் பொருள் உணர்த்துவது.

‘ஈறு தோன்றிய சாதி ஒருமையும்
ஈறு தோன்றாத சாதி ஒருமையும்
எனஇரு திறப்படும் இருதிணை மருங்கினும்’

இஃது உரைச் சூத்திரம்.‘சிவிகை, பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை’ (கு.37) என உயர்திணைக்கண் வரும். இதனை, தொல்காப்பியத்துள் ‘மெய்ந்நிலை மயக்கின் ஆஅ குநவும்’ - (சொல். 449) என்பதனால் அடக்குவர் நச்சினார்க்கினியர் என்க...........

இனி அஃறிணைக்கண்ணும் ‘அஞ்சுவது அஞ்சாமை பேதைமை (கு 428) எனத் திருவள்ளுவரினும், ‘நூலெனப் படுவது நுவலுங்காலை’ எனத் தொல்காப்பியத்தினும் (பொ. 478) ஈறு தோன்றிய சாதி ஒருமை வரும்.

தென்புலத்தார் தெய்வம்’ - (கு. 43) ‘குணம் என்னும் குன்றேறி நின்றார்’ (-கு. 29) என்புழிக் குணம்-தெய்வம் என ஈறு தோன்றாச் சாதி ஒருமை வரும். அவற்றின் உரையானும் காண்க.

‘கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் - நாவாயும் ஓடா நிலத்து’ - (கு. 496). ‘வேலாண் முகத்த களிறு’ - (கு. 500) என்புழிப் பன்மை வினைச்சொல்லோடும் பன்மை வினைக்குறிப்புப் பெயரோடும் முடிந்தனவாயினும் அவற்றின்கண் சாதி ஒருமை என்னாமை காண்க. (அவை அஃறிணை இயற்பெயராம்.)

‘எண்என்...................உயிர்க்கு’ -(கு. 392). ‘கற்க..........தக’ (கு. 391). இவற்றையும் வடநூலார் சாதிப் பன்மை என்பர்.