இனிச் சிவஞானமுனிவரும் தம் தொல்காப்பிய முதற் சூத்திர விருத்தியுள் பின்வருமாறு குறித்துள்ளார்: சொல்லும் பொருளும் பேதா பேதமாகலின் அது பற்றி, ‘உறுதவ நனிஎன வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப.’ - தொ. சொ. 299 ‘கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள’ - தொ. சொ. 372 ‘புதிதுபடல் பொருட்டே யாணர்க் கிளவி’ - தொ. சொ. 379 எனச் சிலவற்றை வேற்றுமைநயம் படவும், ‘கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு’ - தொ. சொ. 319 ‘தடவும் கயவும் நளியும் பெருமை’ - தொ. சொ. 320 எனச் சிலவற்றை ஒற்றுமைநயம் படவும் கூறுவராகலின், ஈண்டு ‘எழுத்தெனப்படுப, அகரமுதல் னகரஇறுவாய்’ - தொ. எ. 1 என ஒற்றுமைநயம்படக் கூறிற்று. சொல்லும் பொருளும் வேறு என்பார் எழுத்து எனப் பெயர் பெறுவனவற்றை எழுத்து என்றது ஆகுபெயர் என்ப. இனிச் சொல்லும் பொருளும் ஒன்று என்பார், ‘புதிதுபடல் பொருட்டே யாணர்க்கிளவி’ (தொ. சொ. 279) என்பது ‘இராகுவினது தலை’ என்றாற்போலும் என்பர். இவற்றால் சொல்லும் பொருளும் ஒன்று எனவும், வேறு எனவும், ஒற்றுமையும் வேற்றுமையும் கலந்தன எனவும் மூவகைக் கருத்துக்கள் இலக்கணம் வல்லாரிடை நிலவுதல் காணலாம். வட நூலார் மதம் பற்றிச் சொல்லும் பொருளும் ஒன்றே என்று கருதுவார் பலர்.] 8 | அவ்வுரை யதனுள் அடுத்தவா சகங்கட்கு அவர்கருத்து அறியாது அவரவர் கருத்தினுள் கொண்ட பொருள்படப் பொருள்கூ றுவரே |
‘இச்சூத்திரத்திற்கு இதுவே பொருள்’ என்னும் வாசகத்திற்கு, இது பொருள் என்றும், இது பொருள் அன்று என்றும், இது |