பக்கம் எண் :

78இலக்கணக் கொத்து 

‘தோன்றல் திரிதல் கெடுதல் விகாரம்
மூன்றும் மொழிமூ விடத்தும் ஆகும்’                                  - ந. 154

எனத் தொல்காப்பியம் திரிபு என்று கூறும் பெயர், நன்னூலில் விகாரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

‘தெரிநிலை உடைய அஃறிணை இயற்பெயர்
ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே’                     - தொ. சொ. 171

‘பால்பகா அஃறிணைப் பெயர்கள்பாற் பொதுமைய’                       - ந. 218

எனத் தொல்காப்பியம் அஃறிணை இயற்பெயர் எனக் குறியிட்டுள்ள பெயர், நன்னூலில் பால்பகா அஃறிணைப்பெயர் என்று வேறு ஒரு குறியிடப்பட்டுள்ளது. ஒருவிதி தனக்குப் பல பெயர் வருதற்கு இவ்விரண்டும் எடுத்துக்காட்டு.]

10. ஒருபெயர் தனக்கே பலவிதி வருமே

தனிமொழியாவது, ஆ என்றும், ஆறு என்றும், ஆற்றினன் என்றும், ஒன்று என்றும் கூறுவர்.

தொடர்மொழியாவது ஆ என்றும், ஆறு என்றும் ஆற்றினன் என்றும், ஆறிரண்டு என்றும், ஆறிரண்டுதோளான் என்றும், வாழை என்றும் கூறுவர்.

பொதுமொழியாவது எட்டு என்றும், கவி என்றும், சாத்தன் என்றும், வாழ்க என்றும் கூறுவர். இவை போல்வன ஒரு பெயர்க்கே பலவிதி.

[வி-ரை: தனிமொழி - ஒரேசொல். தொடர்மொழி - தொடர்ந்த இரண்டு முதலிய சொற்கள். பொதுமொழி - ஒருகால் தனிமொழியாகவும் ஒருகால் தொடர்மொழியாகவும் அமைவது, ஒருபொருளுக்கும் அப்பொருள் செய்வானுக்கும் பொதுவாக அமைவது, உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாக அமைவது, இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் பொதுவாக அமைவது எனப் பலவகைப்படும்.