பக்கம் எண் :

126இலக்கணக் கொத்து 

எ-டு: வாளால் வெட்டினான், ‘ஆலத்தினால் அமிர்து ஆக்கியகோன் (கோவை27)’ காலத்தினால் செய்த நன்றி’ (கு102) எனவரும்.

[வி-ரை: வாளால் - மூன்றன் உருபு தனக்குரிய கருவிப் பொருளில் வந்ததற்கு எடுத்துக்காட்டு.

ஆலத்தினால் என்பது மூன்றாம் வேற்றுமைக்குரிய கருவிப் பொருளில் வருதற்கும் இரண்டாவதன் செயப்படுபொருட்கண் வருதற்கும் ஒத்து நிற்கின்றது. ஆலத்தினால் அமிர்து ஆக்கிய ஆலத்தினை அமிர்து ஆக்கிய; ஒரேபொருள் கருவியாகவும் செயப்படுபொருளாகவும் வந்த பொருள்மயக்கமாம்.

‘காலத்தினால் செய்த நன்றி’ ‘காலத்தினால்’ என்பது தனக்குரிய மூன்றன் பொருள் விடுத்துக் ‘காலத்தின்கண்’ எனத் தன்னின் வேறாய எழன்பொருள்படுதலின் உருபு மயக்கமாம்]. 5

இட உருபுக்குச் சிறப்புவிதி

18உருபுவேறு உருபு சொல்லுருபு ஆகியும்
உருபினை ஏலாப் பெயரே ஆகியும்
உருபினை ஏற்ற பெயரே ஆகியும்
உருபு தொக்க பெயரே ஆகியும்
இரண்டுஉருபு இணைந்தால் ஒன்றுஉருபு ஆகியும்
மாறி நின்றும் வரும்இட உருபே.

எ-டு:

ஊர்க்கண் இருந்தான் - கண்: உருபு.
ஊரின் இருந்தான் - இல்: வேறோர் ஏழன் உருபு.
ஊர்த்திசை இருந்தான் - திசை: ஏழன் சொல்லுருபு.

கண் அகல் ஞாலம், கண் அகல் பரப்பு - இடம் அகன்ற உலகம், இடம் அகன்ற பரப்பு எனப் பொருள்படுதலின் இவற்றில் கண் என்பது உருபு ஏலாத பெயராம்,