பக்கம் எண் :

144இலக்கணக் கொத்து 

‘பிறர்க்கின்னா ... ... ... ... வரும்’

‘பெரியவர் ... ... ... ... ... தொடர்பு’

என்னும் இவற்றுள் தாமே, தானே என்னும் சுயமேவபதம் தொடர்ந்த வரும் நந்தும், தேயும் என்னும் அகன்மக பரஸ்மை பதம் என்னும் செயப்படுபொருள் குன்றிய வினைமுற்றுச்சொல்லோடு வரும் கருமத்தைக் கருமகருத்தா என்பர். இவை சகன்மக பரஸ்மைபதம் என்னும் செயப்படுபொருள் குன்றாத வினைமுற்றுச் சொல்லோடு முடியாமையின். பாடியகாரர் கருமகருத்தா ஆகா என்பர்’ என்று குறிப்பிட்டதும் காண்க.

ஆதித்தன் ... பிறப்பித்தான் - உயர்திணையில் ஏதுக்கருத்தா.

காற்று - உதிர்த்தது - அஃறிணையில் ஏதுக்கருத்தா.

தெரியாநிலைக்கருத்தா நீங்கலான ஆறும் தெரிநிலைக்கருத்தாவின் வகை என்க.

சாத்தன் உண்டான் - இது மற்றும் சிலரால் இயற்றப்படும் தன்மை இன்றித் தானே கருத்தாத்தன்மை எய்தினமையின் தன்வசக் கருத்தாவாயிற்று. இதனை வீரசோழியம் தலைமைக் கருத்தா என்னும். பிரயோகவிவேகம் சுதந்திரக் கருத்தா என்னும்.

மாடம் செய்யப்பட்டது என்பது தெரியநிலைக்கருத்தாவுக்கு எடுத்துக்காட்டு. இது பொருள் அளவில் செயப்படு பொருளாமேனும் இவ் வாக்கியத்தில் சொல் அளவில் மாடம் என்பது எழுவாயாய் இருத்தல் நோக்கித் தெரியாநிலைக் கருத்தா எனப்பட்டது. பிரயோகவிவேகமும் மாடம் தச்சனால் எடுக்கப்பட்டது என்ற எடுத்துக்காட்டினைத் தந்துள்ளது. ஆனால் வீரசோழியத்தில் தெரிநிலை தெரியாநிலை என்பன மாற்றிக் கூறப்பட்டுள்ளன.

‘கொற்றதனால் கொள்ளப்பட்டது வீடு’

என்புழிக்கருத்தா இடம் தெரிந்து நிற்றலால், தான்தெரி கருத்தா வாயிற்று.

‘தேவதத்தன் சோற்றை அடுகிறான்’

என்புழித் தேவதத்தன் என்னும் சொல் தானே கருத்தா என்னும் இடம் தெரிந்து நில்லாமையானும், சோற்றை என்னும் காரக-