| வேற்றுமையில் - நூற்பா எண். 16, 17, 18 | 147 |
எ-டு: அரசன் தேர் செய்தான் - ஏவுதல்வினை. தச்சன் தேர் செய்தான் - இயற்றுதல்வினை. சாத்தன் உறங்கினான் - இவையின் வேறாயவினை - எனவரும். [வி-ரை: உறங்குதல் என்ற வினை ஒருவன் மற்றவனை ஏவுதலாலோ, ஒருவன் தானே முயன்று இயற்றுவதாலோ நிகழாமல் இயற்கையாக நிகழுமொருவினையாதலின் அஃது ஏவுதல் இயற்றுதல் என்ற இரண்டின் வேறாயிற்று.] வினைமுதற்குப் புறநடை 29 | வினைமுதல் இன்னும் விரிக்கின் பெருகும்.
|
[வி-ரை: சுருக்கமாக நூற் இயற்றப்புக்க ஆசிரியர் பெரிதும் விரித்தலை விரும்பாமையானும், வினைமுதல் பற்றிய செய்தி இவ்வளவிற்றே என்று அறுதியிட்டுக்கொள்வார் திரிபுணர்வை அகற்றவேண்டுவது இன்றியமையாதது ஆதலானும் இந்நூற்பாவை வேண்டாகூறி வேண்டியது முடித்தார். இனிவரும் வேற்றுமைப் புறநடை நூற்பாக்களும் அன்ன. 17 விளி வேற்றுமை 30 | அழைத்தல் என்றுஒன்று அன்றிவேறு இன்மையின் விளிக்குச் சூத்திரம் விளம்பிலம் என்க.
|
[வி-ரை: விளிவேற்றுமை படர்க்கையோரை முன்னிலைப்படுத்தி அழைத்தல் என்ற ஒரே பொருளை உடையது ஆதலின், அதுபற்றி ஆசிரியர் எதனையும் விளக்கவில்லை. வடநூலார் ஒருமைவிளியைச் சம்போதனம் என்றும் பன்மை விளியைச் சம்புத்தி என்றும் கூறுவர். தமிழில் அத்தகைய குறியீடு இன்மையின் அப்பாகுபாட்டினை இவ்வாசிரியர் குறிப்பிடவில்லை] 18 |