| வேற்றுமையில் - நூற்பா எண். 26 - 28 | 159 |
தோன்றும். அவதி (எல்லை) சலம், அசலம் என்ற இரண்டனையே அடிப்படையாகக் கொண்டு தோன்றும் என்று வீரசோழியம் (40) கூறும். சலம், அசலம், எல்லை, என்பனவற்றின்கண் ஐந்தாவது வரும் என 11ஆம் காரிகையிலும், உவமை, சீமை ஏது என்பன வற்றின்கண்ணும் பஞ்சமி வரும் என 15ம் காரிகையிலும் பிரயோக விவேக உரை குறிப்பிடும்.] எ-டு: மலையின் இழிந்தான் - மலை - நிலைத்திணை. யானையின் இழிந்தான் - யானை - இயங்குதிணை. சிறுமையின் நீங்கிய (கு-98) - சிறுமை - பண்பு. ‘ஆதி’ என்றதனால் ‘குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி’ (கு-502) ‘ஐயத்தின் நீங்கி’ (கு-353) எனவும் வரும். [வி-ரை: குற்றத்தின் நீங்கி - குற்றத்தின் எல்லையிலிருந்து புறத்தே நீங்கி, ஐயத்தின் நீங்கி - ஐயத்தின் எல்லையிலிருந்து புறத்தேநீங்கி எனப் பொருள்பட்டு ஐந்தாவது எல்லைப் பொருளில் வந்தவாறு. சிறுமையின் நீங்கிய என்பதும் எல்லைப் பொருளோடு கூடிய நீக்கம் என்னும் பிரயோக விவேகம் (11 உரை).] 26 நீக்கத்திற்குப் புறனடை 39 | நீக்கம் இன்னும் நினைக்கின் பெருகும். 27 |
குறை என்பதன் வகைகள் 40 | ஒற்றுமை வேற்றுமை உரைக்கப் படும்குறை ஒற்றுமை ஆவதுஓர் பொருளே யாகும்; ஒன்றாய்த் தோன்றல் உரிமையாய்த் தோன்றல் வேறாய்த் தோன்றல் எனவேற் றுமையாம்; ஒன்றன் கூட்டம் பலவின் ஈட்டம் திரிபின் ஆக்கம் சினைகுணம் தொழில்என ஓர்அறு வகையாம் ஒன்றாய்த் தோன்றல்; பொருள்இடம் காலம் இருவகை நூல்என உரிமையாய்த் தோன்றல் உரைக்கப் படுமே; வேறாய்த் தோன்றல் வேறுஇடத் தும்செலும் நிலைமையில் உடைமைகள் பலவும் ஆகும்.
| |
|