| வினையியல் - நூற்பா எண். 4 | 199 |
சாத்தா! புலி போல்; நெய்போலுதல், போன்றல், போறல் - நீர்க்கு இல்லை; புலி போன்றான்; புலிபோன்ற சாத்தன்; புலிபோன்று பாய்ந்தான்; -இவை ஐந்தும் இடைஅடியாகப் பிறந்த வினை, உவம உருபுகள் எல்லாம் இம்முறையே வரும். கண்ணே! சிவ; கண்ணே சிவத்தல், கண்ணே சிவப்பு; கண் சிவந்தது; சிவந்த கண்; சிவந்து வீங்கின; -இவை ஐந்தும் உரி அடியாகப் பிறந்த வினை. எல்லாப் பண்புகளும் இம்முறையே வரும். [வி-ரை: பிரயோகவிவேகம் 35 ஆம் நூற்பா உரையுள் இன்னும் வடமொழியார் சுப்புத்தாது என்னும் பெயர் அடியாகப் பிறக்கும் வினைகளும் உள. எ-டு: ‘நாவலொடு பெயரிய பொலம்’ -முருகு. 18 ‘ஐ எனப் பெயரிய வேற்றுமை’ -தொ.சொ. 71 ‘அழகிய சொக்கர்’ ‘பேதைக்கு அமர்த்தன கண்’ -கு. 1084 ‘பைத்த பாம்பணையான்’ -திருவாய் 3-3-10 ‘மைந்த கூந்தல்’ ‘கொடுப்பது அழுக்கறுப்பான்’ -கு. 166 ‘நல்கூர்ந்தார்’ -கு. 1046 ‘முதலா ஏன தம்பெயர் முதலும்’ -தொ.எ. 66 ‘அவ்வித்து அழுக்காறு உடையானை’ -கு. 167 |