| ஒழிபியல் - நூற்பா எண். | 253 |
அளபெடை வகைகள் 90 | இயற்கை அளபெடை செயற்கை அளபெடை எழுத்துப்பே றளபெடை இசைநூ லளபெடை ஒற்றுப்பே றளபெடை ஒரோவழிக் கூடில் ஐந்தென மொழிப அளபெடை; அவைதாம் குற்றெழுத் தளபெடை நெட்டெழுத தளபெடை ஒற்றெழுத் தளபெடை எனஒரு மூன்றாய் மொழிமுதல் இடைகடை மூன்றினும் வருமே.
| |
விளி, பண்டமாற்றார்த்தல், புலம்புதல், முறையிடுதல், ஆதியிடத்துச் சொற்குப்பின் தோன்றாது கூடப்பிறத்தல் இயற்கை. சீர்தளை வழுவின இடத்துச் சொல் பிறந்தபின் புலவன் பெய்துகொள்ளுதல் செயற்கை. எழுத்துப்பேறு உயிர்மயங்கியல் முதலான இடங்களில் அராஅப்பாம்பு முதலிய சொற்களில் காண்க. இசையளபெடை வழக்கினுள் காமரத்தாரிடத்தில் காண்க. ஒன்றின்யும் செய்யுட்கெடின் ஒற்றை உண்டாக்கும் குன்றுமேல் ஒற்றளபும் கொள்’ மாபுராணம். என்பதனால் ஒன்றிப்பேறளபெடை காண்க. இவ்விதி சிறு பான்மையாதலின் ‘கூடில்’ என்றாம். எனவே நான்கும் பெரும் பான்மை என்க. ‘பழூஉப்பல் அன்ன பருவுகிர்ப் பாவடி’ - குறுந் 180 ‘நெய்போல் வதூஉம்’ - நாலடி 124 ‘நீங்கின் தெறூஉம் - கு. 1104 ‘துப்பாய தூஉம் மழை’ - கு 12 ‘கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்’ - தொ. எ. 6 |