பக்கம் எண் :

298இலக்கணக் கொத்து 

விகாரமும் பொருளும்

115விகாரத் தால்பொருள் வேறு படுதலும்
விகாரத் தால்பொருள் வேறு படாமையும்
உளஎன மொழிப உணர்ந்திசி னோரே.

எ-டு:

கா - காவி - காவிரி எனவும்,

ஆரம் - அரம், அன்பன் - அற்பன் எனவும்,

பாலாறு - பாலா - பால் - பா

மாலை பெற்றான் - மால் பெற்றான்,

தாரை குறித்தான் - தார் குறித்தான்

எனவும் தோன்றல் திரிதல் கெடுதலாகிய மூவிகாரமும் முறையே வரப் பொருள் வேறுபட்டது காண்க.

புளியங்காய், காமத்துப்பால், உரியநெய் எனவும்.

‘திருத்தார்நன் றென்றேன் தியேன்’ பொன்குடம் - பொற்குடம், ஏழுகடல் - எழுகடல் எனவும்,

பாலை விரும்பினான் - பால் விரும்பினான், மீனை வெறுத்தான் - மீனை வெறுத்தான். ஆதன் தந்தை - ஆந்தை, பூதன் தந்தை - பூந்தை, கொற்றன் தந்தை - கொற்றந்தை, சாத்தன் தந்தை - சாத்தந்தை, கொற்றனக்கு மகனாகிய கொற்றன் - கொற்றங் கொற்றன், அகங்கை - அங்கை எனவும் தோன்றல் திரிதல் கெடுதல் ஆகிய மூவிகாரமும் வரப் பொருள் வேறுபடாதது காண்க.

[வி-ரை: ஆரம் - மாலை; அரம் - தேய்க்கும் கருவி மால் - மயக்கம்; தாரை - ஒரு தோற் கருவி; தார் - ஆடவர் மார்பில் அணியும் மாலை.

புளிக்காய், காமப்பால், உரிநெய் என்பன முறையே அம், அத்து, அகரச்சாரியை பெற்றுப் பொருளை விளக்கின.