பக்கம் எண் :

332இலக்கணக் கொத்து 

பொருளைப் பொருளெனல் வாழநிலை. பொருளன்று என்று அறிந்தும் ஒரு காரணம் பற்றி இதுவே பொருளெனல் வழா நிலையுள் அடங்கும். பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணர்தலே வழு, அங்ஙனம் பிறழக் கோடற்குக் காரணம் அநாதியாகத் தொடர்ந்து வரும் புல்லறிவாண்மை என்பது குறள் வாயிலாக விளக்கப்பட்டுள்ளது,]

மேலதற்குப் புறனடை

123அன்புஅருள் ஆசையோடு அறிவுஅறி யாமைஇவ்
ஐந்தால் துணிதல்அம் மூன்றனுள் அடங்கும்.

என்பது வெளி.

[வி-ரை: அன்பு, அருள், ஆசை, அறிவு, அறியாமை என்பன வற்றால் துணியப்படும் திறனும் முற்கூறிய பொருளைப் பொருளெனர் முதலிய முக்கூற்றின்கண் அடங்கும்] 37

தொடர் இரண்டு

124ஒருதொடர் பலதொடர் எனத்தொடர் இரண்டே.

எ-டு: சாத்தன் அரிசி நெல் பயறு முதலானவை கொண்டு வந்தான்; கொற்றன் பூ இலை காய் பழம் முதலானவை கொண்டு வந்தான்; தேவன் மிளகு புளி கடுகு முதலானவை கொண்டு வந்தான்; பூதன் சீலை தாலி பூண் அணி முதலானவை கொண்டு வந்தான்; அரசன் அக்காலத்து அமைச்சொடு வந்தான்; தலைவன் தலைவிக்குத் தாலி கட்டினான் - இப் பலதொடர்களும் வரைவு என்னும் ஒரு பொருட் கண்ணே வருதலின் ஒரு தொடரேயாம். அங்ஙனம் ஆதல் வந்தான் என்னும் ஐந்து முற்றையும் செய என் எச்சமாக்கி நோக்குக. இக்கருத்து ‘வினைமுற்றே வினையெச்சமாகலும்’ (ந. 351) என்னும் சூத்திரத்துள் ‘கானவர் இரிய’ (சீவக. 454) என்னும் செய்யுளில் காண்க. [மயிலைநாதர் உரை]