என அதிகரணங்கருத்தாவாகியும் வந்தன அல்லவோ எனின், அல்ல என்க. என்னை? அபிகித கருத்தாவும் அபிகித கருமமும் பிரதமையோடேவரும் எனவும், ஒழிந்த கரணமும் சம்பிரதானமும் அவதியும் அதிகரணமும் பிரதமையோடு வாரா எனவும் விதித்தமையான் என்க’’ என்று குறிப்பிட்ட கருத்து இவ்வாசிரியருக்கும் உடன்பாடாயிற்று.] 14 இருவினைமுதல் வினை 27 | +இருவினை முதலால் ஒருவினையும் உள.
|
எ-டு: தாய் மகவுக்கு ஊட்டினாள்; ஆரியன் மாணாக்கனுக்குப் படிப்பித்தான்; தலைவன் தலைவியைப் புல்லினான் - எனவரும். [வி-ரை: சில வினை நிகழ்ச்சிக்கு வினைமுதல் இரண்டு தேவைப்படும். ஊட்டுதல் தொழில்நிகழ்ச்சிக்குத் தாயோடு மகவு இருத்தலும், படிப்பித்தல் தொழில்நிகழ்ச்சிக்க ஆசிரியனோடு மாணாக்கன் இருத்தலும், புல்லுதல் தொழில் நிகழ்ச்சிக்குத் தலைவனோடு தலைவி இருத்தலும் இன்றியமையாதன ஆதலின், இத்தொழில்கள் எழுவாய் ஒன்றனான் நிகழ்வன அல்ல என்பதனை உட்கொண்டு இருவினைகளால் நிகழும் வினை என்றார். மகவு - மாணாக்கன் - தலைவி என்ற சொற்கள் மகவுக்கு - மாணாக்கனை - தலைவிக்கு - என முறையே நான்கன் உருபு இரண்டன் உருபு நான்கன் உருபு என்பனவற்றை ஏற்ற சொற்களாக அமையவினும் முறையே ஊட்டுதல் - படிப்பித்தல் - புல்லுதல் என்ற தொழில் நிகழ்ச்சிக்கு இவையும் எழுவாய்த்தன்மைப்பட்டு நிற்றல் உணரப்படும்.] 15 மூவகை வினைமுதல்கள் 28 | *ஏவுதல் இயற்றுதல் இவையின்வேறு ஆதல் எனவினை முதல்மூ வகையாம் என்ப.
|
+ நன்னூல் 295 முனிவர் உரை. * நன்னூல் 295 - முனிவர் உரை. |