பக்கம் எண் :

148இலக்கணக் கொத்து 

செயப்படுபொருள் விரி

31*கருத்துண் டாதல், கருத்தின் றாதல்,
இருமையும் ஆதல், ஈருருபு இணைதல்,
கருத்தா ஆதல், அகநிலை ஆதல்,
தெரிநிலை ஆதியாய் வரும்செயப் படுபொருள்;
இயற்றப் படுதல், எய்தப் படுதல்,
வேறு படுக்கப் படுதல் ஆதியும்,
அவ்வெழு வகையுள் அடங்கும் என்ப.
 

[வி-ரை: வாக்கியபதீயத்துள்ளும் கையடத்துள்ளும் செயப்படுபொருள் நிருவர்த்தியம் - விகாரியம் - பிராப்பியம் என்று பகுக்கப்பட்டிருத்தலை உட்கொண்டு, சேனாவரையர் முதலாயினார் செயப்படுபொருளை, இயற்றப்படுதல் - வேறுபடுக்கப்படுதல் - எய்தப்படுதல் என மூன்றாகப் பகுத்தனர். வீரசோழிய நூலார் 41 ஆம் காரிகையில் செயப்படுபொருளைப் பற்றுக்கருமம், வீட்டுக்கருமம் இருபுறக் கருமம், தான்தெரி கருமம், தான்தெரியாக் கருமம், கருத்தாகக்கருமம் தீபகக்கருமம் என ஏழுவகையாக விளக்கினார். பிரயோக விவேக நூலார் தெரிநிலைச் செயப்படுபொருள் - தெரியா நிலைச் செயப்படுபொருள் என இரண்டாகப் பகுத்துத் தெரிநிலைக்கு உட்பிரிவுகள் இல்லை என்று கூறித் தெரியாநிலையைக் கருத்துண்மை - கருத்து இன்மை - இருமை - ஈருருபு இணைதல் - கருத்தாவாதல் என ஐவகையாகப் பகுத்து, மிகைச் சொல்லால் அகநிலையும் கொண்டார். ஆகவே இவ்வாசிரியர் குறிப்பிடும் எழுவகைச் செயப்படுபொருள் பிரயோகவிவேகம் குறிப்பிடுவனவே. வீரசோழித்துள் சிறிது வேறுபாடுள்ளது.]

எ-டு:

சோற்றை உண்டான் - கருது உண்டாதல்.

சோற்றைக் குழைத்தான் - கருத்து இன்றாதல்.

எறும்பை மிதித்து வழியைச் சென்றான்.

பசும்புல்லை மிதித்துப் பலவூரை அடைந்தான்.

துகளொடு கூழை உண்டான்.


* நன்னூல் 296. முனிவர் உரை.