பக்கம் எண் :

 வேற்றுமையில் - நூற்பா எண். 32165

இனி, முற்கூறிய பொது இலக்கணங்களுள் ஒப்பாய் நிற்கும் உருபுகளும், ஒரு பொருட்கே பல உருபுகள் வருவனவும், வேறு உருபுகள் வருவனவும் ஆகிய மூவிலக்கணமும் ஒருங்கே தோன்ற வினைமுதல் முதலாகச் சிறப்புச் சூத்திரம் செய்கின்றாம்.

உருபு நோக்கிய சொல் பல பொருள்படுதலைத் தொல்காப்பியர் ‘பொருண்மை சுட்டல்’ (சொ. 67) என்னும் சூத்திராதிகளானும், நன்னூலார் ‘வினைபெயர் வினாக்கொளல்’ (ந. 295) என்னும் சூத்திராதிகளானும் விரித்தனர். அதனால் விரித்திலம் என்க.

வினைமுதற்கண் பல உருபு வருதல்

44+ஒன்று மூன்றுநான்கு ஆறுஎனும் உருபொடு
வருமே வினைமுதல் எனவகுத் தனரே.

எ-டு:

அவர் செய்தார் - முதல் வேற்றுமை;

அவரால் செய்யத்தகும் அக்காரியம் - மூன்றாவது;

அவர்க்குச் செய்யத்தகும் அக்காரியம் - நான்காவது;

‘இணைத்தென அறிந்த சினைமுதற் கிளவிக்கு
வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும் ’.                     -(தொ.சொ.33)

‘இன்னென வரூஉம் வேற்றுமை உருபிற்கு
இன்என் சாரியை இன்மை வேண்டும்’.                            -(தொ.எ. 131)

- இவையும் நான்காவது;

அவரது வரவு - ஆறாவது;

- என முறையே காண்க.

[வி-ரை: உருபு ஏற்ற சொற்கள் மூன்றாவது நான்காவது ஆறாவது வேற்றுமைகளைச் சுட்டி நிற்பினும், போந்த பொருளால் வினைமுதல் ஆமாறு காண்க; காரியம் செய்வார் அவர் ஆகலானும், வேண்டுவது கிளவி ஆகலானும், வேண்டுவது உருபு


+ நன்னூல் 317. முனிவர் உரை