பக்கம் எண் :

 வினையியல் - நூற்பா எண். 18225

விளக்குக் காட்டிற்று;

நோன்பிற்குக் காப்பு கட்டினான்;

மகற்குப் பொற்காப்பு அணிந்தான்;

எனக்கு இவ்வேல் காப்பு;

உனக்கு இவ்வரண் காப்பு;

அவற்கு இவ்வாள் காப்பு;

-எனத் தொழிற்பெயர் கருவியாயிற்று;

கிடக்கை உயர்ந்தது;

படுக்கை தாழ்ந்தது;

-எனத் தொழிற் பெயர் இடமாயிற்று;

பொருள் செயல்வகை (செய்யும் வகை)

வினை செயல்வகை (செய்யும் வகை)

‘தோன்றலாறே’ தொ. சொ. 160. (தோன்றும் ஆறே)

‘உயிர்த்த லாறே’ தொ. எ. 17. (உயிர்க்கும் ஆறே)

-எனத் தொழிற்பெயர் பெயரெச்சமாயிற்று.

‘ஆய்தம் கெடுதல் ஆவயினான’ தொ. எ. 200. (கெடுதல் - கெடுக)

‘மெய்யீறு எல்லாம் புள்ளியொடு நிலையல்’ தொ. எ. 104. (நிலையல் - நிலைபெறுக) எனவும்.

‘ஏற்றான்புள் ஊர்ந்தான் எயிலெரித்தான் மார்பிடந்தான்
நீற்றான் நிழல்மணி வண்ணத்தான் - கூற்றொருபால்
மங்கையான் பூமகளான் வார்சடையான் நீள்முடியான்
கங்கையான் நீள்கழலான் காப்பு:                                 திவ்.பிர 2155

(காப்பு-காப்பாவான்) எனவும் தொழிற்பெயர் வினைமுற்றாயிற்று.

இவ்வாறு தொழிற்பெயராவது வினைமுதல்ஆதி முற்று ஈறாக ஆறு பொருள்பட்டது காண்க.