இன்மை பற்றி வரும் உபசர்க்கம் 101 | அவற்றுள் இன்மை ஐவகை ஆகும்.
|
அவை சிவஞான சித்தியாரின் அபாவ அளவையுள்ளும் தண்டியலங்காரத்துள் அபாவவிரிச் சூத்திரத்துள்ளும் காண்க. ஆயின் வடமொழி இலக்கணத்தை இங்ஙனம் விரிக்கின் பயன் என் எனின், ‘இல்லென் கிளவி இன்மை செப்பின்’ - தொ. எ. 372 ‘இல்லென் இன்மைச் சொற்கு ஐ அடைய' - ந. 233 ‘இல்பொருள் உவமை’ தண்டி. எனவும், அல்வழி, அஃறிணை, அவனல்லன், குற்றியல்லன் மகன், மகனன்று குற்றி. ‘இருதிறன் அறிவுளது இரண்டலால் ஆன்மா’ ‘இருதிறன் அல்லது சிவசத்தாமென’ எனவும், ‘கோளில் பொறி’ (கு. 6) ‘பயனில் சொல்’ - கு. 196. எனவும் முறையே அம்மூன்றனையும் முற்காலத்தார் மொழி பெயர்த்துத் தமிழிற்குரிய இலக்கண இலக்கியம் ஆக்கினர். அன்றியும், பிற்காலத்தார், ‘நேர்ந்த மொழிப் பொருளை நீக்கவரும் நகரம்’ - நே.எ. 11 ‘என்றும் அபாவமும் இல்லதன் அபாவமும்’ தண்டி 91 ‘அபாவம் பொருள்ஒப்பு ஆறு என்பர்’ -சி.சி.பா. 7 என்றும், ‘அத்துவிதம் ஒன்றையும் ஆங்கு’ ‘அநாதி முத்த சித்துரு’ -சி.சி.சு. 1 சூ. 18 ‘அபேதப் பிறப்பிலதாய்’ எனவும் மொழிபெயராமலே தமிழ்க்குரிய இலக்கண இலக்கிய மாக்கினர். ஆகையால் அம்மூன்றனையும் அவற்றுள் ஒன்றான ஐந்தனையும் விரித்து அறியாக்கால், தமிழ் இலக்கண இலக்கியங்கட்குப் பொருள் கொள்ளக்கூடாது. பொருள்கொள்ளும் கருவியாய் விரித்ததனால், மிகவும் பயனுண்டே என்க. |